மலையாள நடிகையான ரம்யா நம்பீசன், தமிழில் அவ்வபோது நடிக்கும் படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தாலும், அவருக்கு பெரிய வாய்ப்புகள் ஏதும் கிடைப்பதில்லை. வளரும் நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடிப்பவர், தற்போது அறிமுக ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடிக்க தொடங்கியுள்ளார்.
சமீபத்தில் வெளியாகி வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தில் அறிமுக ஹீரோ கவினுக்கு ஜோடியாக நடித்திருக்கும் ரம்யா நம்பீசன், புதுமுக ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பது ஏன்? என்பது குறித்து கூறினார்.
ரம்யா நம்பீசன் பல படங்களில் அம்மா வேடங்களிலேயே நடித்திருக்கிறார். விஜய் சேதுபதியின் ‘சேதுபதி’ படத்தில் நடித்த அவருக்கு தொடர்ந்து அதுபோன்ற வேடங்களாகவே வர, சற்று அப்செட்டானவர், அறிமுக ஹீரோக்கள் மற்றும் இளம் ஹீரோக்கள் படங்களில் நடித்தால், அம்மா வேடத்தில் நடிக்க வேண்டி இருக்காது, என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.
அதற்காக இளம் ஹீரோ மற்றும் அறிமுக ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க சம்மதம் தெரிவித்து வருகிறாராம். மேலும், அம்மாவாக நடிப்பதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை, என்றும் கூறுகிறார்.
ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘குசேலன்’ திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது...
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் 'சன்னிதானம் (P...
அறிமுக இயக்குநர் சுபாரக்.எம் இயக்கத்தில், ஷரீஷ் சினிமாஸ் சார்பில் ஏ...