Latest News :

பாடகரான தம்பி ராமையா!
Friday May-24 2019

மனோன்ஸ் சினி கம்பைன் சார்பில் ஆரூரான் தயாரித்து வரும் படம் ‘காவி ஆவி நடுவுல தேவி’. இதில் புதுமுகம் ராம்சுந்தர் ஹீரோவாக நடிக்க, பிரியங்கா ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, சிவசங்கர், டக்ளா ராமு, சிவகாமி, வேல்சிவா, சிவராஜ், ரிஷா, வாணி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

 

ஸ்ரீகாந்த் தேவா இசையில், டாக்டர் கிருதியா எழுதிய, 

 

“அஞ்செழுத்து ஆடன்வனே 

ஆஞ்சனேயா - நீ

ராமசாமி தூதனய்யா

ஆஞ்சனேயா” என்ற பாடலை நாடிகர் தம்பி ராமையா பாடியுள்ளார். இதன் மூலம் இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வந்தவர், தற்போது பாடகராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

 

அதேபோல், கவிஞர் ஜீவன் மயில் எழுதிய,

 

“இந்திரன் கெட்டதும் பிகராலே

சந்திரன் கெட்டதும் பிகராலே”

 

என்ற பாடலை இசையமைப்பாளர் தேவா பாடியிருக்கிறார்.  இந்த இரண்டு பாடல்களும் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்று படக்குழுவினர் கூறுகிறார்கள்.

 

மேலும், தம்பி ராமையா பாடிய பாடலை கேட்டு, இப்படத்தின் கதையாசிரியர் வி.சி.குகநாதன், இயக்குநர் புகழ்மணி, தேவா, ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர் பாராட்டியுள்ளார்கள்.

 

இப்படத்திற்கு கணேசன் ஒளிப்பதிவு செய்ய, சூப்பர் சுப்பரான் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார். ராஜ்கீர்த்தி படத்தொகுப்பை கவனிக்க, சிவசங்கர் நடனம் அமைக்கிறார். தயாரிப்பு நிர்வாகத்தை கே.தமிழ்செல்வன், எம்.சரவணன் ஆகியோர் கவனிக்க, ஜே.துரை மேற்பார்வையிடுகிறார்.

 

இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயை எட்டியுள்ள நிலையில், விரைவில் பாடல்களை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Related News

4938

’குசேலன்’ படத்திற்கு காட்டிய பொறுப்புணர்வை ‘கூலி’ படத்திற்கு காட்டாத ரஜினிகாந்த்!
Wednesday August-13 2025

ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘குசேலன்’ திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது...

யோகி பாபு படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட இயக்குநர் சேரன் மற்றும் நடிகை மஞ்சு வாரியர்!
Monday August-11 2025

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் 'சன்னிதானம் (P...

பரபரப்பான திகில் திரில்லர் படமாக உருவாகியுள்ள ‘நறுவீ’!
Monday August-11 2025

அறிமுக இயக்குநர் சுபாரக்.எம் இயக்கத்தில், ஷரீஷ் சினிமாஸ் சார்பில் ஏ...

Recent Gallery