தமிழ் பேசும் நடிகை மட்டும் அல்லாமல் சென்னையைச் சேர்ந்த நடிகையாகவும் உள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வந்தாலும் கமர்ஷியல் கதாநாயகியாவதற்கு பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இருந்தாலும் அவருக்கு வருவதென்னவோ குணச்சித்திர வேடங்கள் தான்.
இதற்கிடையே ஒரு சில படங்களில் மாடர்ன் மற்றும் லேசான கவர்ச்சி காட்டி நடித்தாலும் அது ஐஸ்வர்யா ராஜேஷுக்கு எடுபடாமல் போய்விட்டது.
இதற்கிடையே விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், அப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் தனக்கு முக்கிய இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்க, அவருக்கு தற்போது மணிரத்னம் இயக்கும் படத்தில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
ஜோதிகா ஹீரொயினாக நடிக்கும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றொரு ஹீரோயினாக நடிக்கிறார். ஹீரோக்களாக விஜய் சேதுபதி, துல்கர் சல்மான், தெலுங்கு நடிகர் நான், அரவிந்த் சாமி ஆகியோர் நடிக்கிறார்கள். இதில் துல்கர், நான் ஆகியோர் நடிப்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அரவிந்த்சாமி மற்றும் விஜய் சேதுபதியுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...