சின்னத்திரை சீரியல்கள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தீபா வெங்கட். ’ரோஜா’, ‘சித்தி’, ‘கோலங்கள்’, ‘அண்ணாமலை’ என பல பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர், சூர்யா, விக்ரம், அஜித், விஜய் என பல முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் நடித்திருக்கிறார்.
நடிப்பு மட்டும் இன்றி பின்னணி குரல் கலைஞராகவும் பல படங்களில் பணியாற்றி வரும் தீபா வெங்கட், நயன்தாராவுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
மேலும், ஹலோ எப்.எம்-மில் நட்சத்திர தொகுப்பாளராக கடந்த 10 வருடங்களாக பணியாற்றி வந்த தீபா, ‘மூன்றாம் பார்வை’ என்ற நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி வந்தார். இந்த நிகழ்ச்சிக்காகவும், தீபாவுக்காகவும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், தனது சொந்த காரணங்களால் ‘மூன்றாம் பார்வை’ நிகழ்ச்சியில் இருந்து தான் விலகுவதாக தீபா வெங்கட் அறிவித்துள்ளார். அவரது இந்த திடீர் முடிவால், அவரது ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.
ஏ.எஸ்.ஆர் பிலிம்ஸ் சார்பில் ஏ...
‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...