Latest News :

சிம்புக்கு ஆகஸ்ட் மாதம் திருமணம்! - பெண் யார் தெரியுமா?
Saturday May-25 2019

தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்களைக் கொண்ட நடிகர்களில் ஒருவரான சிம்பு, தனது சினிமா பயணமாகட்டும், பர்சனல் வாழ்க்கையாகட்டும் பலவித பிரச்சினைகளையும், சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறார்.

 

சிம்புவின் அடுத்தப்படம் என்னவாக இருக்கும், என்ற எதிர்ப்பார்ப்பை விட, சிம்புவுக்கு எப்போது திருமணம் நடக்கும், என்ற எதிர்ப்பார்ப்பு தான் அதிகமாகியுள்ளது. காரணம் சிம்புவின் தம்பி குறளரசனுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. மூத்தவர் சிம்பு இருக்கையில் அவரது தம்பிக்கு திருமணம் நடந்தது ஒரு பக்கம் இருந்தாலும், சிம்புவின் திருமணம் குறித்து அவரது தந்தையும் நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, அவர் அழுதபடியே, “சிம்புவுக்கு திருமணம் செய்ய நான் போராடிக் கொண்டிருக்கிறேன்” என்று கூறியதால், சிம்புவின் திருமணம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதற்கிடையே, காமெடி நடிகர் கூல் சுரேஷ், நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, சிம்புவுக்கு பெண் பார்த்துட்டாங்க, அது யார் என்பது எனக்கு தெரியும், எப்போது திருமணம் என்பதும் எனக்கு தெரியும், என்று கூறினார்.

 

இந்த நிலையில், சிம்புவுக்கு வரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவின் அம்மா உஷா ராஜேந்திரன் உறவுக்கார பெண்ணை தான் சிம்பு திருமணம் செய்துகொள்ள போகிறாராம். இருவருக்குமான ஜாதகம் ஒத்து போயுள்ளதால், டி.ராஜேந்திரும் சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.

 

மேலும், சிம்புவை திருமணம் செய்துக்கொள்ளும் பெண் சினிமா சம்மந்தமானவராக இருக்க கூடாது, என்பது டி.ராஜேந்திர உறுதியாக இருக்கிறாராம். அதற்கு சிம்புவும் சம்மதம் தெரிவித்ததாலேயே உறவிக்கார பெண்ணை பேசி முடித்திருப்பதாக கூறப்படுகிறது.

 

ஆகஸ்ட் மாதம் திருமணம் நடப்பது உறுதி என்று கூறப்பட்டாலும், தேதி, பெண் பெயர் உள்ளிட்ட தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Related News

4941

’குசேலன்’ படத்திற்கு காட்டிய பொறுப்புணர்வை ‘கூலி’ படத்திற்கு காட்டாத ரஜினிகாந்த்!
Wednesday August-13 2025

ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘குசேலன்’ திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது...

யோகி பாபு படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட இயக்குநர் சேரன் மற்றும் நடிகை மஞ்சு வாரியர்!
Monday August-11 2025

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் 'சன்னிதானம் (P...

பரபரப்பான திகில் திரில்லர் படமாக உருவாகியுள்ள ‘நறுவீ’!
Monday August-11 2025

அறிமுக இயக்குநர் சுபாரக்.எம் இயக்கத்தில், ஷரீஷ் சினிமாஸ் சார்பில் ஏ...

Recent Gallery