ரசிகைகளுக்கு சர்பிரைஸ் கொடுத்த ‘என்.ஜி.கே’! - மாஸ் காட்டும் சூர்யா
Saturday May-25 2019

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் ‘என்.ஜி.கே’ அரசியல் படம் என்பதாலும், சூர்யா நடிக்கும் முதல் அரசியல் படம் என்பதாலும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. வரும் மே 31 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள ‘என்.ஜி.கே’ வசூலில் பல சாதனைகளை படைக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

இந்த நிலையில், பெண் ரசிகைகளுக்காக சூர்யாவின் ‘என்.ஜி.கே’ படம் சர்பிரைஸ் விஷயம் ஒன்று செய்துள்ளது. அதாவது,  கேரள மாநிலம் செங்கரம்குளம் என்ற பகுதியில் உள்ள மார்ஸ் சினிமாஸ் என்ற திரையரங்கில் பெண்களுக்கான சிறப்பு காட்சி திரையிட உள்ளது. இதன் மூலம் அப்பகுதியில் உள்ள சூர்யாவின் பெண் ரசிகைகள் ’என்.ஜி.கே’ படத்தை முதல் நாளான மே 31 ஆம் தேதியே பார்க்க உள்ளனர்.

 

பொதுவாக, முன்னணி ஹீரோக்களின் படங்கள் சிறப்பு காட்சிகள் திரையிடுவது வழக்கமான ஒன்று தான் என்றாலும், பெண்களுக்கான பிரத்யேகமான சிறப்பு காட்சி என்பது புதிதான ஒன்று தான். அதை செய்திருக்கும் சூர்யாவுக்கு ரசிகர்கள் பலர் அதிலும் பெண் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

Related News

4946

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

Recent Gallery