நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து பல்வேறு தரப்பினர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில், தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் செயலாளரும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவருமான விஷால், இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பொன்னாடை போத்தி வாழ்த்து தெரிவித்தார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஷால், “சமூக சேவையில் ஈடுபாடு உள்ள அனைவரும் அரசியலுக்கு வரலாம்” என்றவரிடம், அரசியலில் ஈடுபடுவீர்களா? என்று நிருபர் ஒருவர் கேட்க, “நான் தான் ஏற்கனவே அரசியலில் இருக்கிறேனே” என்று அதிரடியாக பதில் அளித்தார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் 'சன்னிதானம் (P...
அறிமுக இயக்குநர் சுபாரக்.எம் இயக்கத்தில், ஷரீஷ் சினிமாஸ் சார்பில் ஏ...
அறிமுக இயக்குநர் தமயந்தி இயக்கத்தில், ஜெ ஸ்டுடியோ சார்பில் ஜேசு சுந்தரமாறன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘காயல்’...