இளையராஜாவின் பிரம்மாண்டமான மேடை நிகழ்ச்சி விரைவில் சென்னையில் நடைபெற உள்ளது. இதில், எஸ்.பி.பாலசுப்ரமணியமும் பங்குபெறப் போகிறார் என்பது தான் நிகழ்ச்சியின் ஹைலைட். காரணம், காப்பி ரைட் விவகாரத்தில் இளையராஜாவுக்கும், எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதை தொடர்ந்து, இனி இளையராஜாவின் பாடல்களை தான் பாடப்போவதில்லை, என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் கூறியிருந்தார்.
ஆனால், தற்போது இருவருக்கும் இடையே இருந்த மனவருத்தம் சரி செய்யப்பட்டு, இருவரும் ஒரே மேடையில் பாட இருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சி குறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வரும் இளையராஜாவிடம், தற்போது வெளியாகும் படங்களில், இளையராஜாவின் பழைய பாடல்கள் பாடுவது குறித்து கேட்கப்பட்டது. குறிப்பாக விஜய் சேதுபதி நடிப்பில், கோவிந்த் வசந்தா இசையமைப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘96’ திரைப்படத்தில், இளையராஜாவின் பழைய பாடல்களை படத்தின் ஹீரோயின் பாடுவது போல காட்சி அமைக்கப்பட்டிருந்தது குறித்து கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த இளையராஜா, “இது தவறான விஷயம். படத்தின் பிளாஷ்பேக்கில் அந்த காலகட்டத்தில் நான் இசையமைத்த பாடல் ஏன் வைக்க வேண்டும். இப்போது உள்ள இசையமைப்பாளரே அந்த காலத்திற்கு தகுந்த ஒரு பாடலை இசையமைக்க முடியாதா. இது ஆண்மை இல்லாத தனம் போல உள்ளது.” என்று கடுமையாக விமர்சித்தார்.
இளையராஜாவின் இந்த விமர்சனத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘குசேலன்’ திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது...
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் 'சன்னிதானம் (P...
அறிமுக இயக்குநர் சுபாரக்.எம் இயக்கத்தில், ஷரீஷ் சினிமாஸ் சார்பில் ஏ...