நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் ஏழை மக்களுக்கும், மாணவர்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் மே தினத்தை முன்னிட்டு ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களுக்கு பரிசு கொடுத்து விருந்து வைத்தும் வருகிறார்.
தேர்தல் அறிவிப்பு வெளியானதால் இந்த ஆண்டுக்கான மே தின விழா கொண்டாட்டத்தை தள்ளி வைத்த விஜய், நேற்று இதற்கான விழாவை கொண்டாடினார்.
விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் மே தின விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. விஜய் படப்பிடிப்பில் உள்ளதால், அவரது சார்பாக, விஜயின் உத்தரவின் பேரில் மாநில பொறுப்பாளர் புஸ்ஸி என்.ஆனந்த் விழாவினை தலைமையேற்று, ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களுக்கு பரிசுகள் மற்றும் மத்திய உணவை வழங்கினார்.
ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘குசேலன்’ திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது...
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் 'சன்னிதானம் (P...
அறிமுக இயக்குநர் சுபாரக்.எம் இயக்கத்தில், ஷரீஷ் சினிமாஸ் சார்பில் ஏ...