திருமணத்திற்கு நோ சொன்ன சிம்பு! - பழைய காதலியுடன் மீண்டும் இணைந்தார்
Monday May-27 2019

தனது திருமணம் குறித்து வெளியான தகவல்கள் அனைத்தும் வதந்தி, தனக்கு இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை, படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்துகிறேன், என்று அறிக்கை வெளியிட்ட சிம்பு, தனது பழைய காதலியுடன் மீண்டும் இணைந்திருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

நயன்தாராவுடானான காதல் முறிவுக்கு பிறகு நடிகை ஹன்சிகாவை காதலிக்க தொடங்கிய சிம்பு அவரை கல்யாணம் செய்துக்கொள்ளவும் ரெடியான நிலையில், சிம்பு குறித்து சிலர் நயன்தாராவிடம் பற்ற வைத்த காரணத்தால், சிம்புவின் இரண்டாம் காதலும் தோல்வியில் முடிந்தது.

 

பிறகு காதலே வேண்டாம், என்ற முடிவுக்கு வந்தவர் ஆன்மீகத்தில் ஈடுபட்டு அமைதியானதோடு, படங்களிலும் நடிப்பதில் கவனம் செலுத்தினார்.

 

இந்த நிலையில், ஹன்சிகாவுடன் சிம்பு மீண்டும் இணைந்துள்ளார். ஆம், ஹன்சிகாவின் 50 வது படமாக உருவாகும் ‘மஹா’ படத்தில் சிம்பு முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார். ஹீரோயினை மையப்படுத்திய இப்படத்தை ஜமீல் என்பவர் இயக்குகிறார். இதில், ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, நாசர், கருணாகரன், ஜெயப்பிரகாஷ், சாயா சிங் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மதியழகன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

 

இந்த படத்தில் சிறப்பு தோற்றம் ஒன்றில் நடிக்கும் சிம்பு,  7 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளாராம். தற்போது ‘மஹா’ படப்பிடிப்பில் இணைந்துள்ள சிம்பு, ஹன்சிகாவுடன் நடுக்கடலில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

 

Simbu

Related News

4958

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery