மு.க.ஸ்டாலினை கிண்டல் செய்த கஸ்தூரி! - கடுப்பான நெட்டிசன்கள்
Monday May-27 2019

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் தற்போது நடிகை கஸ்தூரி தான் நம்பர் ஒன். எந்த விஷயமாக இருந்தாலும், யாராக இருந்தாலும் அவர்களை விமர்சனம் செய்தே தன்னை பிரபலப்படுத்திக் கொள்பவர், நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக்கொள்வதிலும் முதல் ஆளாக இருக்கிறார்.

 

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கிண்டல் செய்து பதிவு ஒன்றை வெளியிட்டு, அதன் மூலம் நெட்டிசன்களிடம் கேவலமான விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார்.

 

பாராளுமன்ற தேர்தலில் திமுக பெற்ற வெற்றி குறித்து அறிக்கை வெளியிட்ட அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், “இந்தி பேசும் மாநிலங்களே இந்தியா என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது என்றும், இனி வரும் காலம், மாநிலங்களை மையப்படுத்தும் ஆக்கபூர்வ அரசியலுக்கான காலம் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மத்தியில் எந்த அரசு அமைந்தாலும் எந்தவொரு மாநிலத்தையும் அலட்சியம் செய்துவிட முடியாது என்றும், அனைத்து தேசிய இனங்களையும் ஆதரித்து அரவணைத்துச் செல்ல வேண்டும்.” என்று அதில் தெரிவித்திருந்தார்.

 

ஸ்டாலினின் இந்த கருத்தை கிண்டல் செய்யும் விதமாக ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்ட கஸ்தூரி, “இந்தி பேசும் மாநிலங்கள் மட்டுமே இந்தியா அல்ல" - மு.க.ஸ்டாலின் அட ஆமாம், கோவா குஜராத் கர்நாடகம் ஒடிஷா வடகிழக்கு காஷ்மீர், வங்காளம் போன்ற இந்தி பேசாத மாநிலங்கள் , ஏன், ஆந்திராவும் இந்தியாதான் ! இதை திரு ஸ்டாலின் தானாகவே மனமுவந்து சுட்டிக்காட்டுவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.” என்று அதில் தெரிவித்துள்ளார்.

 

கஸ்தூரியின் இந்த கிண்டலான பதிவுக்கு நெட்டிசன்கள் பலர் அவரை கடுமையாக விமர்சித்து வருவதோடு, சில ஆபாசமான வார்த்தைகளாலும் திட்டி வருகிறார்கள்.

 

 

Related News

4959

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery