மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘துப்பறிவாளன்’ வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
இந்த டிரைலருக்காக விஷால் ரசிகர்கள் மட்டும் இன்றி சினிமா ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள். காரணம், அதில் இடம்பெற்றுள்ள ஆக்ஷன் காட்சிகள் தான்.
படத்தில் இடம்பெறும் அனைத்துக் காட்சிகளையும் ரசிகர்கள் இண்டர்ஸ்டிங்காக பார்ப்பது போல படமாக்கும் இயக்குநர் மிஷ்கின் ஆக்ஷன் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். அதேபோல், அவரது படங்களில் இடம்பெறும் ஆக்ஷன் காட்சிகள் வழக்கமானதாக இல்லாமல், ரசிகர்களை சீட் நுணியில் உட்காரை வைப்பதாக இருக்கும். அப்படிப்பட்ட ஆக்ஷன் காட்சிகளாக மட்டும் இன்றி, வித்தியாசமான ஆக்ஷன் காட்சிகளாகவும் உள்ளது துப்பறிவாளன் படத்தில் இடம்பெற்றுள்ள ஆக்ஷன் காட்சிகள்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம், என்பது போல, இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளைக் கொண்டு வெளியான டீசர் ரசிகர்களிடம் படம் குறித்த எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளதால், டிரைலருக்காகவும் ரசிகர்கள் காத்திருக்கிறர்கள்.
ஆகையால், இன்று (செப்.09) மாலை சரியாக 6 மணிக்கு வெளியாக உள்ள ‘துப்பறிவாளன்’ படத்தின் டிரைலர், புதிய சாதனை படைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...