Latest News :

வெப் சீரிஸ் தொடர் தயாரிக்கும் கெளதம் மேனன்!
Saturday September-09 2017

திரைப்படம், டிவி என்று இருந்த பொழுதுபோக்கு தற்போது வெப் சீரிஸ் என்று உருவெடுத்துள்ளது. ஸ்மார்ட்போன் இருந்தால் உள்ளங்கையில் உலகத்தையே பார்த்துவிடுபவர்கள் மத்தியில் இந்த வெப் சீரிஸ் தொடர்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘மாரி’ போன்ற படங்களை இயக்கிய பாலாஜி மோகன் இயக்கிய ‘ஐயம் சபரிங் காதல்’ என்ற வெப் சீரிஸ் தொடர் பெரும் வெற்றியை பெற்றதை தொடர்ந்து பல முன்னணி இயக்குநர்கள் வெப் சீரிஸ் தொடர்களை இயக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வரிசையில் இயக்குநர் கெளதம் மேனன் இணைந்துள்ளார்.

 

ஆம், இயக்குநர் கெளதம் மேனன் தனது ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் வெப் சீரிஸ் தொடர் ஒன்றை தயாரிக்கிறார். ‘வீக்கெண்ட் மச்சான்’ (Weekend Machan_ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸ் தொடரை ஷமீர் சுல்தான் இயக்க, அர்ஜுன் கிருஷ்ணா இணை இயக்குநராக பணியாற்றுகிறார். இப்படத்தின் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை மதன் குணதேவா கவனிக்கிறார். இந்த குழுவினர் இயக்கிய ‘நான் 8’ என்ற குறும்படம் தாதா சாஹேப் பால்கே உள்ளிட்ட பல்வேறு குறும்பட விழாக்களில் பங்கேற்று பாராட்டு பெற்றுள்ளது.

 

வார கடைசி விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறு தினங்களுக்கான கொண்டாட்டங்களுக்கு ஒன்றாக வாழும் கல்யாணமாகாத  நான்கு  இளைஞர்கள் போடும்  காமெடி திட்டங்களே இத்தொடரின் கதையாகும். இன்றைய இளைஞர்களின்  வார கடைசிக்கான  வெற்றிகரமாகும்  திட்டங்கள், திட்டமிடாத அவர்களது திட்டங்கள், நடைபெறாத அவர்களது திட்டங்கள், திங்களன்று  நடந்ததை மறந்தே போகும் மறையும்  திட்டங்கள், திட்டங்கள் எப்படி போனாலும் கவலைப்படாமல் அடுத்த வாரத்திற்கு மறுபடியும் திட்டமிடுதல் போன்ற  அனைத்து அம்சங்களும்  இந்த வலை தொடரில் காமெடியாக சொல்லப்பட்டுள்ளது. 

 

இந்த ’வீக்கெண்ட் மச்சான்’ வெப் சீரிஸ் தொடரின் டீசர் ஒன்றாக யுடியூப் சேனலில் நாளை (செப்.10) வெளியாகிறது.

Related News

497

கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு ரூ.1 லட்சம் கொடுத்து வாழ்த்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான்!
Sunday November-02 2025

பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது...

Recent Gallery