தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமாக இருக்கும் நடிகைகள் பெரும்பாலும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களாக தான் இருக்கிறார்கள். தமிழ் சினிமா இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் ஹீரோயின் தேர்வு என்றாலே கேரளாவில் முகாமிடுவதால், மலையாள சினிமா நடிகைகளின் வரவு கோலிவுட்டில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில், புதிய கேரள வரவாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகியிருக்கும் அனு சித்ரா, பல தமிழ்ப் படங்களில் நடித்து பிரபலமாகிவரும் நிலையில், அவரைப் பற்றிய ரகசியம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது 22 வயதாகும் அனு சித்ரா கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டும் அல்ல, அவர் 18 வயதிலேயே தனது காதலரை திருமணம் செய்துக் கொண்டாராம். திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் நடிக்க வந்த அனு சித்ரா, தற்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
ஆனால், இதை மறுத்திருக்கும் அனு சித்ரா, தனக்கு திருமணம் ஆனது உண்மை தான், ஆனால் கர்ப்பமாக இருப்பதாக வெளியாகும் தகவல் பொய். தற்போது குழந்தை பெற்றுக்கொள்ளும் அடியா இல்லை, சினிமாவில் தான் எனது முழு கவனமும் இருக்கும், என்று விளக்கம் அளித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் 'சன்னிதானம் (P...
அறிமுக இயக்குநர் சுபாரக்.எம் இயக்கத்தில், ஷரீஷ் சினிமாஸ் சார்பில் ஏ...
அறிமுக இயக்குநர் தமயந்தி இயக்கத்தில், ஜெ ஸ்டுடியோ சார்பில் ஜேசு சுந்தரமாறன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘காயல்’...