அப்போ ஸ்ரீரெட்டி, இப்போ லட்சுமி ராய்! - ராகவா லாரன்ஸுக்கு வந்த புது பிரச்சினை
Thursday May-30 2019

‘காஞ்சனா’ சீரிஸ் படங்கள் மூலம் தொடர் வெற்றிகளை கொடுத்து வரும் இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் மீது நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறிய நிலையில், தனது படத்தில் ஸ்ரீரெட்டி வாய்ப்பு கொடுத்தார். இந்த பிரச்சினை தற்போது முடிவுக்கு வந்த நிலையில், மேலும் ஒரு பிரச்சினையில் ராகவா லாரன்ஸ் சிக்கியுள்ளார்.

 

ராகவா லாரன்ஸுன் இந்த புது பிரச்சினைக்கு நடிகை லட்சுமி ராய் தான் காரணமாம். அதாவது, ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து மாபெரும் வெற்றி பெற்ற ‘காஞ்சனா’ படம் இந்தியில் ‘லட்சுமி பாம்’ என்ற தலைப்பில் ரீமேக் ஆகிறது. இதில், அக்‌ஷய் குமார் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக கியாரா அத்வானி நடிக்கிறார்.

 

இப்படத்தை இயக்கி வந்த ராகவா லாரன்ஸ், திடீரென்று படத்தில் இருந்து விலகினார். மேலும், தன்னை அவமானப்படுத்தி விட்டதாகவும், தனது அனுமதி இல்லாமலேயே படத்தின் பஸ்ட் லுக் வெளியாகியுள்ளது, என்றும் கூறினார்.

 

இந்த நிலையில், ராகவா லாரன்ஸ் ‘லட்சுமி பாம்’ படத்தில் இருந்து விலகியதற்கான உண்மையான காரணம் லட்சுமி ராய் தானாம்.

 

இப்படம் தொடங்கப்பட்டவுடன் ஹீரோயினாக லட்சுமி ராயை போட வேண்டும் என்று ராகவா லாரன்ஸ் கூறினாராம். ஆனால், தயாரிப்பாளரோ பாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் ஒரு நடிகையை போட்டால் தான் படத்திற்கு பிளஸாக இருக்கும் என்று கூறி, கியாரா அத்வானியை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்தார்கள். இதில் இருந்தே தயாரிப்பு தரப்புக்கும் ராகவா லாரன்ஸுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்த நிலையில், பஸ்ட் லுக் விஷயத்திலும் தனது பேச்சை தயாரிப்பாளர் கேட்கவில்லை என்றதுமே படத்தில் இருந்து விலகிவிட்டாராம்.

Related News

4976

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery