தென்னிந்திய நடிகர்கள் சங்கத்திற்கு வரும் ஜூன் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது தலைவராக் இருக்கும் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்டவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.
நாசர் தலைமையிலான அணியை எதிர்த்து நடிகை ராதிகா தலைமையில் புதிய அணி ஒன்று போட்டி போட போவதாக கூறப்பட்டது. சரத்குமார் மற்றும் ராதாரவி மீது மோசடி வழக்கு இருப்பதால், அவர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களால் தேர்தலில் போட்டியிட முடியாததால், ராதிகா தேர்தலில் களம் இறங்குவார் என்று கூறப்பட்டது.
ஆனால், இதை மறுத்திருக்கும் ராதிகா, தேர்தலில் நான் போட்டியிடுவதாக வெளியாகும் தகவல்கள் அனைத்தும் வதந்தி. தேர்தல் நடக்கும் நாள் அன்று நான் இங்கே இருக்கவே மாட்டேன், என்று தெரிவித்துள்ளார்.
ராதிகாவின் இந்த விளக்கத்தால், இந்த முறை நடிகர் சங்க தேர்தலில் நாசர் மற்றும் விஷால் தலைமையிலான அணிக்கு எதிராக போட்டியிட சரியான அணி இருக்காது என்பதால், தேர்தலும் பரபரப்பு இல்லாமல் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் 'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள “சிறை” படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமூக வலைத்தளம் வழியே வெளியிட்டுள்ளார்...
புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’...