Latest News :

முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கும் சசிகுமார்!
Thursday May-30 2019

கிராமத்து நாயகனாக வெற்றிப் பெற்ற சசிகுமார், தற்போது வித்தியாசமான கதைக்களங்களி நடிக்க தொடங்கியிருக்கிறார். அவரது சினிமா பயணத்தில் சிறப்பான இடம் பிடிக்கு வகையிலான படம் ஒன்றில் அவர் நடிக்கிறார்.

 

நான் அவனில்லை, அஞ்சாதே, பாண்டி, வன்மம், மாப்பிள்ளை, டிக் டிக் டிக் உள்பட பதிமூன்று படங்களைத்   தயாரித்த நெமிச்சந்த் ஜெபக் நிறுவனம் சார்பாக ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கும் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் சசிகுமார் நடிக்கிறார். இப்படத்தில் சசிகுமார் உடன் தேசியவிருது பெற்ற  ஜோக்கர் படத்தின் நாயகன் குருசோமசுந்தரம் நடிக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக   மானஷா ராதா கிருஷ்ணன் நடிக்கிறார்.   மேலும் இப்படத்தில் இளங்கோ குமரவேல், மாரிமுத்து, அப்புக்குட்டி, ஜார்ஜ் மரியான், பசங்க சிவக்குமரன், சுஜாதா, வித்யா ப்ரதீப், மஞ்சுபெத்து ரோஸ் மற்றும் பலர்  நடிக்கின்றனர்.

 

மலையாளத்தில் காலேஜ் டேஸ், காஞ்சி, டியான், ஆகிய தரமான படங்களைத் தந்த ஜி.என்.கிருஷ்ணகுமார் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.

 

இப்படத்தில் சசிகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸாக நடிக்கிறார். படம் முழுதும் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் என்பதால் பார்வையாளரை படம் தன் வசப்படுத்திக் கொள்ளும் விதமாக கதை திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறதாம்.   

 

Guru Somasundaram

 

இவை போன்ற திரில்லர் படங்களுக்கு இசையின் பங்களிப்பு மிக முக்கியம். அதை இப்படத்தில் அர்ப்பணிப்பு உணர்வோடு வெகு சிறப்பாக செய்து வருகிறார் இசை அமைப்பாளர் ரோனி ராப்பில். 

 

சினிமா என்பதே காட்சிமொழி என்பதால், அந்த மொழியை  S.கோபிநாத் அவர்களின் கேமரா மிக அற்புதமாக கற்று வைத்திருக்கிறது. அந்த ரிசல்ட் நமக்குத் திரையில் மிகப்பிரம்மாண்டமாக தெரியும். அவரின் ஒளிப்பதிவு இப்படத்தில் பெரிய அளவில் பேசப்படும்.

 

அன்பு அறிவு மாஸ்டரின் அதிரடி சண்டைக்காட்சிகள் எப்போதும் பிரம்மிக்க வைப்பவை. பொதுவாக போலீஸ் கதை என்றால் அங்கு சண்டைக்கு பஞ்சமே இருக்காது. இப்படத்தின் சண்டைக்காட்சிகள் படத்திற்கு பெரும்பலம் சேர்க்க இருக்கிறது.  

 

கே.ஜே.வெங்கட் ரமணன் எடிட்டிங் செய்யும் இப்படத்திற்கு அருள்செழியன் வசனம் எழுத, கலையை சிவகுமார் யாதவ் நிர்மாணிக்கிறார்.

 

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப்படம் தயாரிப்பாளர் ஹித்தேஷ் ஜெபக் அவர்களின் 14-வது தயாரிப்பாகும்.

Related News

4980

நடிகர் துல்கர் சல்மானின் 'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!
Sunday August-10 2025

செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் 'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...

‘சிறை’ பட ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
Sunday August-10 2025

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர்  சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள “சிறை” படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்கை,  முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமூக வலைத்தளம் வழியே வெளியிட்டுள்ளார்...

“திரையுலகில் என் பெற்றோர் என்றால் அது விஜயகாந்தும் ராவுத்தரும் தான்” - ஆர்.கே.செல்வமணி நெகிழ்ச்சி
Saturday August-09 2025

புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’...

Recent Gallery