Latest News :

பெண்களை வைத்து யோகி பாபு செய்யும் புதிய தொழில்!
Thursday May-30 2019

கதை எழுத பிள்ளையார் சுழி போடுவதற்கு முன்பாகவே யோகி பாபுவின் தேதியை வாங்கிவிட்டு பல இயக்குநர்கள் கதை எழுத தொடங்குகிறார்கள். அந்த அளவுக்கு யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்று சொல்லலாம்.

 

ரஜினி, அஜித், விஜய் என மாஸ் ஹீரோக்களின் படங்களில் நடிப்பவர், அப்படியே அறிமுகம் மற்றும் வளர்ந்து வரும் ஹீரோக்கள் என்று பாகுபாடு பார்க்காமல் அத்தனை படங்களிலும் நடிப்பவர், சில படங்களில் ஒரு காட்சியிலாவது தோன்றும் அளவுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகளோடு கலக்கிக் கொண்டிருக்கிறார்.

 

இந்த நிலையில், இதுவரை பார்த்த யோகி பாபு ஒரு புறம் இருக்க, புதிய பரிமாணம் எடுத்திருக்கும் யோகி பாபு, வலது, இடது என தன்னை சுற்றி பெரிய பெண்கள் கூட்டத்தை வைத்துக்கொண்டு புதிய தொழில் ஒன்றை ஆரம்பித்திருக்கிறாராம். நிஜத்தில் இல்லங்க, படத்தில்.

 

ஆர்.ஜி மீடியா சார்பாக டி.ராபின்சன் தயாரித்துள்ள ‘கடலை போட ஒரு பொண்ணு வேணும்’ என்ற படத்தில் தான் யோகி பாபு இந்த புதிய பரிமாணத்தை எடுத்துள்ளார்.

 

இப்படம் குறித்து இயக்குநர் ஆனந்த்ராஜன் கூறுகையில், “யோகிபாபுவின் இன்னொரு பரிணாமத்தை இந்தப்படம் காட்டும். வழக்கமாக படங்களில் காமெடியை தொழிலாகப் பண்ணும் யோகிபாபுவைப் பார்த்திருக்கிறோம். இந்தப்படத்தில் யோகிபாபு பண்ணும் தொழிலே பக்கா காமெடியாக இருக்கும். யோகிபாபு செய்யும் தொழிலுக்கு இடது வலதாக இருக்கும் அடியாட்கள் அனைவரும் பெண்கள். அந்தப்பெண்களை அவர் கடலைப் போட்டு உஷார் பண்ணுவார் என்பது தான் படத்தின் ஹை பாயிண்ட் காமெடி. கடலைப்போட்டு கடலைப்போட்டு பெண்களை உஷார் செய்து ரவுடித் தொழில் செய்யும் அவரிடம் கடலைப்போட பெண் தேடும் ஹீரோ அசார் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கும் இடங்களில் எல்லாம் சிரிப்பால் நம் வயிறு பிதுங்கும். முழுக்க முழுக்க மக்களை ஜாலியாக எண்டெர்டெயின்மெண்ட் பண்ண வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே எடுக்கப்பட்டிருக்கிற படம் இது. நிச்சயம் இந்தப்படம்  கமர்சியலாக பெரிய வெற்றிபெறும். அதற்கான எல்லா சாத்தியங்களையும் படத்தில் கையாண்டிருக்கிறோம்.” என்றார்.

 

இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் ஆனந்த்ராஜான், இயக்குநர் சமுத்திரக்கனியிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

படத்தில் யோகிபாபு  பெரிய பில்லர் என்றால், ஹீரோ அசார் பெரிய எனர்ஜி. சின்னத்திரை மூலமாக மக்களை மகிழ்வித்த அசாருக்கு இப்படம் பெரிய திரையில் நல்லதொரு விசிட்டிங் கார்டாக அமையும் என்கிறார்கள். மேலும் படத்தில் சாஜித், மன்சூர் அலிகான், செந்தில், சுவாமிநாதன், தீனா, மனோகர், காஜல், மற்றும் பலர் நடித்துள்ளனர். இனியன் J.ஹரிஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜீபின் இசை அமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விரைவில் நடைபெற இருக்கிறது.

Related News

4983

நடிகர் துல்கர் சல்மானின் 'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!
Sunday August-10 2025

செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் 'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...

‘சிறை’ பட ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
Sunday August-10 2025

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர்  சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள “சிறை” படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்கை,  முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமூக வலைத்தளம் வழியே வெளியிட்டுள்ளார்...

“திரையுலகில் என் பெற்றோர் என்றால் அது விஜயகாந்தும் ராவுத்தரும் தான்” - ஆர்.கே.செல்வமணி நெகிழ்ச்சி
Saturday August-09 2025

புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’...

Recent Gallery