Latest News :

ஹீரோவான ‘மெட்ராஸ்’ ஜானி!
Thursday May-30 2019

கார்த்திக் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற ‘மெட்ராஸ்’ படத்தில் மறக்க முடியாத பல கதாபாத்திரங்கள் இருந்தாலும், அதில் முக்கியமான வேடமாக மக்கள் மனதில் இடம்பிடித்த வேடம் ‘ஜானி’. யாரை பார்த்தாலும் ஜானி என்று அழைத்துக் கொண்டு, ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு பித்து பிடித்தவரைப் போல அந்த வேடத்தில் நடித்து அசத்தியவர் ஹரி கிருஷ்ணன்.

 

’மெட்ராஸ்’ படத்தை தொடர்ந்து ‘கபாலி’, ‘வடசென்னை’, ‘சண்டைக்கோழி 2’, ‘பரியேறும் பெருமாள்’ என பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த ஹரி கிருஷ்ணன், ’சிறகு’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

 

இசையும், பயணமும் இரண்டறக் கலந்திருக்கும் கதைக்களம் கொண்ட இப்படம் சென்னையில் தொடங்கி, கன்னியாகுமரி வரை நீள்கிறது. இயந்திரங்களாக மனிதர்கள் மாறிய இக்காலக்கட்டத்தில் புத்துணர்வை கொடுக்கும் இயற்கையோடு இணைந்த பயணமும், இசையுமாக உருவாகும் இப்படத்தில் ஹீரோயினாக அக்‌ஷிதா நடிக்கிறார். இவர் நடனம் மற்றும் யோகாவில் தேர்ச்சி பெற்றவர். இவர்களுடன் டாக்டர் வித்யா, நிவாஸ் ஆதித்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். காளி வெங்கட் நட்புக்காக நடித்திருக்கிறார்.

 

Siragu

 

ராஜா பட்டாச்சாரியா ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு அரோல் கொரேலி இசையமைத்திருக்கிறார். அருண் குமார் வி.எஸ் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

 

திரைப்படத்துறையில் எக்சிகியூடிவ் தயாரிப்பாளராக பல ஆண்டுகள் பல நிறுவனங்களில் பணியாற்றிய மாலா மணியன்,தனது ஃபர்ஸ்ட்  காப்பி புரொடக்ஷன்ஸ் (FIRST COPY PRODUCTIONS) நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரிக்க, கவிஞர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட குட்டி ரேவதி, இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

Related News

4984

நடிகர் துல்கர் சல்மானின் 'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!
Sunday August-10 2025

செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் 'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...

‘சிறை’ பட ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
Sunday August-10 2025

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர்  சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள “சிறை” படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்கை,  முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமூக வலைத்தளம் வழியே வெளியிட்டுள்ளார்...

“திரையுலகில் என் பெற்றோர் என்றால் அது விஜயகாந்தும் ராவுத்தரும் தான்” - ஆர்.கே.செல்வமணி நெகிழ்ச்சி
Saturday August-09 2025

புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’...

Recent Gallery