சூர்யா பட நடிகைக்கு கொலை மிரட்டல்! - போலீசில் புகார்
Friday May-31 2019

சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நாயகிகளில் ஒருவராக நடித்தவரும், பிரபல மாடலுமான மீரா மித்துன், தனக்கு சிலர் கொலை மிரட்டல் விடுவதாக சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

 

’8 தோட்டாக்கள்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கும் மீரா மித்துன், தேசிய அளவில் பிரபல மாடலாக விளங்குவதோடு, பல அழகிப் போட்டிகளையும் நடத்தி வருகிறார.

 

இந்த நிலையில், அவர் நடத்த இருக்கும் “மிஸ் தமிழ்நாடு டீவா 2019’ போட்டியை நடத்த விடாமல் தடுப்பதற்காக சிலர் முயற்சி செய்வதோடு, அவருக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக, போலீசில் புகார் அளித்துள்ளார்.

 

இது குறித்து அவர் அளித்த புகாரில், “நான் மிஸ் சவுத்இந்தியா, மிஸ் தமிழ்நாடு, மிஸ் கியூன் ஆப் சவுத் இந்தியா ஆகிய பட்டங்களை வென்றுள்ளேன். 2 தமிழ் படங்களில் நடித்துள்ளேன். மிஸ் தமிழ்நாடு மண்டல இயக்குனராகவும் பணி புரிந்துள்ளேன்.

 

இந்நிலையில் மே 3-ம்தேதி ’மிஸ் தமிழ்நாடு டீவா 2019’என்ற நிகழ்ச்சியை நடத்தப்போவதாக அறிவித்தேன். இதனை தடுக்கும் வகையில் அஜீத் ரவி, ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். எனது செல்போனையும் சமூகவலைதளத்தையும் முடக்கி விட்டு தவறான வதந்திகளை பரபரப்பி வருகின்றனர். நான் இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை நடத்தக்கூடாது என்பதற்காகவே 2 பேரும் மிரட்டல் விடுத்து வருகின்றனர். மேலும் சில காவல்துறை அதிகாரிகள் மூலமாக மிரட்டி வருகின்றனர். சம்மன் இல்லாமல் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைக்கின்றனர். அவர்கள் மிரட்டல் தொடர்பான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. 

 

Meera Mithun

 

அஜீத் ரவி ஏற்கனவே என்னுடைய அழகி போட்டி நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார்.தொழில் போட்டி காரணமாக ஜோ மைக்கேல் பிரவீன் மூலமாக அஜீத் ரவி என்னை மிரட்டி வருகிறார். அழகி போட்டிகளில் தமிழ் பெண்களுக்கு வாய்ப்பு கிடைப்பது இல்லை. தமிழ் பெண்களுக்காகவே நான் நடத்தும் இந்த அழகி போட்டியும்  தமிழ் பெண்களுக்காகத் தான். 2 பேரும் அதனை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிகழ்ச்சியை நான் நடத்த உதவியாக இருக்க கூடிய விளம்பரதாரர்களையும் அவர்கள் 2 பேரும் மிரட்டுகிறார்கள். இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கையை காவல்துறை எடுக்க வேண்டும். ஜூன் 3-ம்தேதி வடபழனி நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ள அழகி போட்டிக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.


Related News

4991

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery