Latest News :

இளையராஜாவையும், எஸ்.பி.பி யையும் மீண்டும் இணைத்த ‘தமிழரசன்’!
Saturday June-01 2019

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் ‘தமிழரசன்’ படத்தில் இளையராஜா இசையமைப்பில், எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடல் பாடுகிறார்.

 

பாடல்கள் ராயல்டி விவகாரத்தில் இளையராஜா, எஸ்.பி.பி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், இனி இளையராஜாவின் பாடல்களை தான் பாடப்போவதில்லை என்று எஸ்.பி.பி அறிவித்திருந்தார்.

 

இதற்கிடையே, ஜூன் 2 ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கும் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் பாடப்போகிறார். இதையடுத்து இளையராஜாவுக்கும், எஸ்.பி.பிக்கும் இடையே இருந்த பிரச்சினை தீர்ந்து சமாதானம் அடைந்தார்கள்.

 

இந்த நிலையில், மேடை நிகழ்ச்சிக்கு முன்பாகவே இளையராஜாவையும், எஸ்.பி.பி யை ‘தமிழரசன்’ படம் ஒன்றாக்கியுள்ளது. ஆம், தமிழரசன் படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமனியம் ஒரு பாடல் பாடியுள்ளார். இப்படால் இன்று ஒலிப்பதிவு செய்யப்பட்டது. 

 

SP Balasubramaniyam and Ilayaraja

 

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கும் படம் இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். மற்றும் சுரேஷ் கோபி, ராதாரவி சோனு சூட், யோகி பாபு, சங்கீதா, கஸ்தூரி, ரோபோ சங்கர், சாயாசிங் மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர்,  ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ், சென்ட்ராயன், கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமி நாதன், முனீஸ்காந்த்,  ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார்.

 

ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இப்படதின் பாடல்களை பழனிபாரதி மற்றும் ஜெய்ராம் எழுதுகிறார்கள். நிலன் கலையை நிர்மாணிக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளை அனல் அரசு அமைக்க, புவன் அந்திரசேகர் படத்தொகுப்பு செய்கிறார். பிருந்தா, சதீஷ் நடனம் அமைக்கிறார்கள்.

 

படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவுபெற்று இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

Related News

4995

“திரையுலகில் என் பெற்றோர் என்றால் அது விஜயகாந்தும் ராவுத்தரும் தான்” - ஆர்.கே.செல்வமணி நெகிழ்ச்சி
Saturday August-09 2025

புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’...

மிரட்டும் ‘குற்றம் புதிது’ டீசர்! - கவனம் ஈர்த்த அறிமுக நடிகர் தருண் விஜய்
Saturday August-09 2025

தலைப்பு மற்றும் டீசர் மூலம் கவனம் ஈர்த்த பல படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது...

இசைஞானியிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்
Saturday August-09 2025

பிரபல இசையமைப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷின் சுயாதீன இசை பாடல்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், தற்போது மிகப்பெரிய பொருட்செலவில் இசை ஆல்பம் பாடலை  பிரமாண்டமாக உருவாக்கியுள்ளார்...

Recent Gallery