மழை, வெயில் என்று பாராமல் பணி செய்யும் போக்குவரத்து காவலர்களை கெளரவிக்கும் வகையில், அவர்களுக்கு கலர் கண்ணாடி ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார் நடிகர் ஜெய்வந்த்.
’மத்திய சென்னை’, ‘காட்டுப்பய சார் இந்த காளி’ ஆகிய திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருக்கும் ஜெய்வந்த் நடிப்பில், ‘அசால்ட்’ என்ற படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், சாலைகளில் போக்குவரத்து நெரிசல்களை சீர்செய்தும், நெரிசல்கள் ஏற்படாவண்ணம் முன்னெடுப்புகளை செய்தும், நமது பயணத்தை எளிதாக்கி தரும் போக்குவரத்து காவலர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில், முதற்கட்டமாக எழும்பூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சுமார் 50 காவலர்களுக்கு ஒரு கூலிங்கிளாஸ் வழங்கியிருக்கிறார் நடிகர் ஜெய்வந்த்.
புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’...
தலைப்பு மற்றும் டீசர் மூலம் கவனம் ஈர்த்த பல படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது...
பிரபல இசையமைப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷின் சுயாதீன இசை பாடல்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், தற்போது மிகப்பெரிய பொருட்செலவில் இசை ஆல்பம் பாடலை பிரமாண்டமாக உருவாக்கியுள்ளார்...