தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமாகிய நடிகர் விஷாலின் பிறந்தநாள் கடந்த ஆகஸ்டு மாதம் 29ம் தேதி கொண்டாடப்பட்டது. விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு 'தலைவன் வருகிறான்' என்ற விஷால் ஆன்தம் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது. விஷாலின் அரசியல் வருகைக்கான முன்னறிவிப்பு தான் இந்த விஷால் ஆன்தம் என்றும் பேசப்பட்டது.
“நேசம் கொண்ட தலைவன் வந்தான்,
நெஞ்சே நிமிர்ந்து நில்லு,
நெருப்பைப் போல தீமை எரிக்கும்
நேர்மை இவன்தான் சொல்லு
வீரம் பாதி ஈரம் பாதி
வெல்லும் எங்கள் விஷால் நீதி…”
என்ற வரிகளுடன் அமைந்த இந்த பாடலை “கொலை விளையும் நிலம்” ஆவணப்படத்தை இயக்கிய க.ராஜிவ்காந்தி இயக்கி விஷாலுக்கு பிறந்த நாள் பரிசாக அளித்தார். இஷான் தேவ் இசையில் முருகன் மந்திரம், பாடல் வரிகளை எழுதி இருந்தார். நிகில் மேத்யூ, இஷான் தேவ் பாடி இருந்தனர். ஒளிப்பதிவு ஆனந்த், குணா, கார்த்திக். எடிட்டிங் ரமேஷ் யுவி. பி.ஆர்.ஓ. நிகில் முருகன்.
'விஷால் ஆன்தம்' குழுவினரை விஷால் வரவழைத்து சந்தித்து தன் மகிழ்ச்சியையும் பாராட்டையும் பகிர்ந்து கொண்டார். விஷால் ஆன்தம் குழுவினரிடம் விஷால் பேசுகையில், “நல்லாருந்துச்சு. ஆனா கொஞ்சம் கூச்சமாகவும் இருந்தது. நான் திரையுலகுக்கு ஆற்றி வரும் பணிகள் இதே உற்சாகத்தோடு தொடரும். இனி நான் எப்போதெல்லாம் இலேசாக சோர்வடைகிறேனோ அப்போதெல்லாம் இந்த பாடல் என்னை உற்சாகப்படுத்தி பணிபுரிய வைக்கும். இசையமைப்பாளர் இஷான் அருமையான பாடலை எனக்காக உருவாக்கியுள்ளார். அவருக்கும் இதைச் செய்த உங்கள் அனைவருக்கும் நன்றி.” என்றார்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...