‘வெண்ணிலா கபடிக்குழு’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான விஷ்ணு விஷால், தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து வந்த நிலையில், திருமணத்திற்குப் பிறகு சொந்தமாக திரைப்படங்களை தயாரிக்கவும் செய்தார். இதற்கிடையே தனது காதல் மனைவியை விவாகரத்து செய்தவர், சமீபத்தில் தனது விவாகரத்துக்கான காரணத்தையும் கூறியிருந்தார்.
இதற்கிடையே, விஷ்ணு விஷால் நடிகை ஒருவருடன் நெருக்கமாக பழகி வருவதால் தான், அவரது இல்லற வாழ்வில் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், சினிமாவில் இதெல்லாம் சாதாரணம், என்பது போல விஷ்ணுவ் இஷால், தனது விவாகரத்துக்கான காரணத்தில் கூறியிருந்தார்.
இந்த நிலையில், பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா குட்டாவுடன் நடிகர் விஷ்ணு விஷால் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புகைப்படங்களை விஷ்ணு விஷால், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டாலும், அதில் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இதனால், அவர் ஜுவாலா குட்டாவுடன் பேட்மிட்டன் விளையாடுகிறாரா? அல்லது ஜுவாலா குட்டா விஷ்ணு விஷால் படத்தில் நடிக்கிறாரா? அல்ல, இருவரும் காதலிக்கிறார்களா? என்று ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
எப்படி, தனது விவாகரத்துக்கான காரணம் குறித்து விளக்கம் அளித்தாரோ அதுபோல, இந்த புகைப்பட விவகாரத்திற்கும் விஷ்ணு விஷால், விளக்கம் அளித்தால் தான் இதனால் ஏற்பட்ட பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
இதோ அந்த புகைப்படங்கள்,
:)@Guttajwala pic.twitter.com/RvxqWoMPYB
— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) June 3, 2019
புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’...
தலைப்பு மற்றும் டீசர் மூலம் கவனம் ஈர்த்த பல படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது...
பிரபல இசையமைப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷின் சுயாதீன இசை பாடல்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், தற்போது மிகப்பெரிய பொருட்செலவில் இசை ஆல்பம் பாடலை பிரமாண்டமாக உருவாக்கியுள்ளார்...