Latest News :

பாவனா கடத்தல் வழக்கு - திலீபின் உறவினர் கைது!
Saturday September-09 2017

பிரபல மலையாள நடிகை பாவனா கடத்தி கற்பழிக்கப்பட்ட வழக்கில், பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், திலீபின் நெருங்கிய உதவியாளரான நாதிர்ஷாவையும் கைது செய்ய முடிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

 

கேரள மாநிலம் ஆலுவா சப் ஜெயிலில் அடைத்து வைக்கப்பட்டுள்ள திலீப், பல முறை ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தும், அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், அவரது அப்பாவின் நினைவுதின நிகழ்வில் பங்கேற்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு 2 மணி நேரம் பரோலில் வெளியே வந்த திலீப், மீண்டு சிறைக்கு சென்றார்.

 

இதற்கிடையே பாவனா கற்பழிப்பு வழக்கில் திலீப்பின் நெருங்கிய உறவினரும், சினிமா நடிகர், தயாரிப்பாளருமான நாதிர்ஷாவுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக நாதிர்ஷாவிடம் விசாரணை நடந்தது. விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்றும் கூறப்பட்டது.

 

இதையடுத்து போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முன்ஜாமீன் கேட்டு நாதிர்ஷா, கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் வருகிற 13 ஆம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தது.

 

மேலும் இந்த வழக்கில் நாதிர்ஷா கைதாவதை தடுக்க முடியாது என்றும் கூறியது. இதனால் நாதிர்ஷா எந்த நேரத்திலும் கைதாவார் என்று தெரிகிறது.

 

அதே சமயம், ஓணப்பண்டிகையின் போது நடிகர் ஜெயராம் சிறைக்கு சென்று திலீப்பை சந்தித்த பிறகு, மலையாள திரையுலக பிரபலங்கள் பலர் திலீப்பை சிறையில் சந்தித்து வருகிறார்கள். நாளுக்கு நாள் அவரை சந்திப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், திலீப்பை சந்திப்பது குறித்து புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ள சிறை நிர்வாகம், நெருங்கிய உறவினர்கள், மிக நெருங்கிய நண்பர்கள் மட்டுமே திலீப்பை பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

Related News

501

'TN 2026' படம் யாரையும் புண்படுத்தாது! - தம்பி ராமையா விளக்கம்
Saturday April-04 2026

‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...

எங்கள் படம் பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும்! - ’பிரேக் ஃபாஸ்ட்’ (Break Fast) படக்குழு நம்பிக்கை
Saturday April-04 2026

’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...

’மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் இயக்குநரை பாராட்டிய செல்வராகவன்!
Friday April-03 2026

வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...

Recent Gallery