ஜூன் 7ஆம் தேதி வெளியாகும் ‘கொலைகாரன்’! - நாளை முதல் ரிசர்வேஷன் தொடக்கம்
Tuesday June-04 2019

வித்தியாசமான தலைப்பு மட்டும் இன்றி, கதைக்களத்தையும் வித்தியாசமானதாக தேர்ந்தெடுக்கும் விஜய் ஆண்டனியின் மற்றும் அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள ‘கொலைகாரன்’ படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆஷ்மிகா நடித்திருக்கிறார். அர்ஜுன் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் நாசர், சீதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 

ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியிருக்கும் இப்படத்தை, தியா மூவிஸ் சார்பில் பி.பிரதீப் தயாரிக்க, ஃபாப்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் சார்பில் தனஞ்ஜெயன் வெளியிடுகிறார்.

 

இந்த நிலையில், ஜூன் 5 ஆம் தேதி வெளியாக இருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் 7 ஆக மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு தரப்பு அறிவித்திருக்கும் நிலையில், நாளை (ஜூன் 5) முதல் ‘கொலைகாரன்’ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.

 

Kolaigaran Reservation

 

சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் விஜய் ஆண்டனியின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

 

படத்தின் டிரைலரும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

5011

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery