’பிக் பாஸ் 3’ யில் போட்டியாளராக சீனியர் நடிகர்!
Tuesday June-04 2019

கமல் ஹாசன் தொகுத்து வழங்க இருக்கும் பிக் பாஸ் சீசன் 3 வரும் ஜூன் 23 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.

 

இதற்கிடையே, போட்டியாளர்கள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பை விஜய் டிவி வெளியிடவில்லை என்றாலும், ஒரு சிலர் குறித்த தகவல் வெளியாகிக் கொண்டிருக்கிறது. சமீபத்திய தகவலாக நடிகை சாந்தினி போட்டியாளராக பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்த நிலையில், 90 களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த ராம்கியை போட்டியாளராக்க பிக் பாஸ் குழுவினர் முயற்சித்து வருகிறார்களாம். இது குறித்து ராம்கியிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாகவும், அவர் இன்னும் சில நாட்களில் தனது முடிவை தெரிவிப்பதாக கூறியதாகவும் கூறப்படுகிறது.

 

Actor Ramki

 

ஏற்கனவே நடிகர் கலையரசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது ராம்கியின் பெயர் அடிபட தொடங்கியிருக்கிறது.

 

யாருடைய பெயர் அடிபட்டாலும், நிகழ்ச்சி தொடங்கும் இறுதி நால் வரை பிக் பாஸ் குழுவினர் போட்டியாளரை தேர்வு செய்துக் கொண்டிருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

5018

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery