Latest News :

கமலுக்கு இன்னொரு ஷாக்! - இந்த ஹீரோயினும் இப்படி செஞ்சிட்டாரே
Tuesday June-04 2019

கடந்த 1996 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை ‘இந்தியன் 2’ என்ற தலைப்பில் கமல் - இயக்குநர் ஷங்கர் கூட்டணி எடுக்கும் முயற்சியில் இறங்கியிருப்பது அனைவரும் அறிந்தது தான், என்றாலும், அப்படத்தின் படப்பிடிப்பு எப்போது, தொடங்கும் என்பதை யாருலும் அறியமுடியவில்லை. ஏன், கமல், இயக்குநர் ஷங்கருக்கு கூட அது தெரியாது போல. 

 

அப்படி ஒரு நிலையில் தான் ‘இந்தியன் 2’ படம் இருக்கிறது. முதலில் இப்படத்தில் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டார். படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்ட நிலையில், படத்தின் பட்ஜெட் குறித்து இயக்குநர் ஷங்கருக்கும் தயாரிப்பு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படப்பிடிப்பு தொடங்காமல் இருந்தது. மேலும், கமல்ஹாசன் அறியல் பணியில் இருந்ததால், அவராலும் படப்பிடிப்பு தாமதமாவதாகும் கூறப்பட்டது.

 

இப்படி படப்பிடிப்பு தாமதம் ஆவதைப் பார்த்த நயன்தாரா, “நமது நடிப்பில் வருடத்திற்கு நான்கு படங்கள் ரிலீஸாகும் நிலையில், ஒரு படத்திற்காக நம்மல நான்கு வருடம் உட்கார வைத்துவிடுவாங்களோ” என்று எண்ணி படத்தில் இருந்து அதிரடியாக விலகினார். அதிலும் கமலுடன் அவர் நடிக்கும் முதல் படம் இது என்பதையும் பொருட்படுத்தாமல், படத்தில் இருந்து விலகுவதாக பட்டென்று கூறி, டக்கென்று நடையை கட்டினார். 

 

Nayanthara

 

கமலுக்கு இது ஷாக்காக இருந்தாலும், “இதெல்லாம் சினிமாவில் சாதரணமப்பா” என்று தள்ளிவிட்டவர், காஜல் அகர்வாலை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்ததோடு, இந்தியன் தாத்தா வேடத்தில் படப்பிடிப்பு துவக்க விழாவையும் நடத்தினார்.

 

அப்பாடி, ஒரு வழியா இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கும் என்று ரசிகர்கள் நிம்மதியடைய, படம் டிராப், என்ற தகவல் பரவ தொடங்கியது. ஒரு கட்டத்தில் படம் டிராப் ஆவது உறுதி என்ற நிலையில், காஜல் அகர்வால், படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கப் போவதாக பேட்டி ஒன்றில் கூறியதோடு, ஷங்கரும் தயாரிப்பு தரப்புடனான மனகசப்பை மறந்து, அவர்களுக்கே படத்தை தயாரிக்கும் முடிவுக்கு வந்ததால், ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்குவது உறுதியானது.

 

Indian 2 Movie Pooja

 

இந்த நிலையில், படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என்று கூறிய காஜல் அகர்வாலே, தற்போது படத்தில் இருந்து விலகும் முடிவுக்கு வந்திருக்கிறாராம்.

 

சீனியர் நடிகராச்சே கொஞ்சம் வெயிட் பண்ணுவோம் என்று அவர் நினைத்தாலும், ‘இந்தியன் 2’ வுக்காக அவர் ஒதுக்கிய தேதிகள் ஓடிக்கொண்டிருப்பதால், மற்றப் படங்களுக்கு இதனால் பிரச்சினை வந்துவிடுமோ என்று பயந்தவர், கமலும் வேண்டாம், அவரது ‘இந்தியன் 2’ படமும் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.

 

Kajal Agarwal

 

ஏற்கனவே நயன்தாரா வெளியேறி கொடுத்த ஷாக் போதாது என்று, தற்போது காஜல் அகர்வாலும் ஷாக் கொடுத்திருப்பதால், ‘இந்தியன் 2’ “வரும் ஆனா வராது” என்ற நிலையில் தான் இருப்பதாக கூறப்படுகிறது.

Related News

5021

மிரட்டும் ‘குற்றம் புதிது’ டீசர்! - கவனம் ஈர்த்த அறிமுக நடிகர் தருண் விஜய்
Saturday August-09 2025

தலைப்பு மற்றும் டீசர் மூலம் கவனம் ஈர்த்த பல படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது...

இசைஞானியிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்
Saturday August-09 2025

பிரபல இசையமைப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷின் சுயாதீன இசை பாடல்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், தற்போது மிகப்பெரிய பொருட்செலவில் இசை ஆல்பம் பாடலை  பிரமாண்டமாக உருவாக்கியுள்ளார்...

’சொட்ட சொட்ட நனையுது’ படம் உங்கள் மனதை மாற்றும் - நடிகர் நிஷாந்த் ரூஷோ நம்பிக்கை
Thursday August-07 2025

அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...

Recent Gallery