போட்டியாளர்கள் தேர்வில் குளறுபடி! - பிக் பாஸ் சீசன் 3 நிறுத்தம்
Wednesday June-05 2019

கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கும் பிக் பாஸ் சீசன் 3 இம்மாதம் 23 ஆம் தேதி ஒளிபரப்பாக இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இதுவரை போட்டியாளர்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. அதே சமயம், அவ்வபோது போட்டியாளர்களாக ஒரு சிலரது பெயர்கள் கசிந்துக் கொண்டு இருக்கின்றன.

 

இந்த நிலையில், தமிழில் பிக் பாஸ் இரண்டு பாகங்களை கடந்தது போல தெலுங்கிலும் இரண்டு பாகங்களை கடந்துள்ளது. இதில் ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கிய முதல் சீசனைப் போல நடிகர் நானி தொகுத்து வழங்கிய இரண்டாம் சீசன் சுவாரஸ்யமாக இல்லை, என்ற குற்றச்சாட்டு உள்ளது.

 

தற்போது தமிழைப் போல தெலுங்கிலும் பிக் பாஸ் மூன்றாம் சீசனுக்காக வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில், போட்டியாளார்களாக அழைக்கப்பட்டவர்களிடம் இருந்து சரியான பதில் வராததால், குறித்த நேரத்தில் நிகழ்ச்சி தொடங்கமுடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில், நிகழ்ச்சி குழுவினரே பிக் பாஸ் சீசன் 3 யை நிறுத்திவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்த தகவலால் தெலுங்கு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்திருக்கும் நிலையில், போட்டியாளர்கள் தேர்வு தற்போது வரை நடைபெற்று வருவதாகவும், ஓரிரு மாதங்களில் நிகழ்ச்சி தொடங்கும் எனவும் நிகழ்ச்சி குழு அறிவித்து ரசிகர்களை ஆறுதலடைய செய்திருக்கிறது.

 

தெலுங்கு பிக் பாஸ் சீசன் 3-யின் போட்டியாளராக அனுஷ்கா பங்கேற்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது நாகர்ஜுனாவின் பெயர் அடிபடுகிறதாம்.

Related News

5025

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery