தென்னிந்திய நடிகர்கள் சங்கத் தேர்தலில் செயலாளர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற விஷால், அடுத்ததாக தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றதோடு, தமிழ் சினிமாவில் பலவித மாற்றங்களை செய்வதற்காக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
அதே சமயம், தனது அம்மா பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி, அதன் மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கு உதவிகள் செய்வதோடு, நலிந்த சினிமா கலைஞர்களுக்கும் நிதி உதவி வழங்கி வருகிறார்.
விஷாலின் இதை செய்வது அரசியலுக்கு வருவதற்காகத்தான் என்று கூறப்பட்டு வந்த நிலையில், வரும் டிசம்பர் மாதம் அரசியல் தொடர்பான பிரம்மாண்ட கூட்டம் ஒன்றை நடத்த விஷால் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ஆன்லைன் மீடியா ஒன்றுக்கு இன்று விஷால் அளித்த பேட்டியில், தான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன், என்று தெரிவித்துள்ளார்.
அந்த பேட்டியில் இது தொடர்பாக பேசிய விஷால், “பதவிக்கு வந்தால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்றால், நிச்சயம் நான் அரசியலுக்கு வருவேன்” என்று கூறியிருக்கிறார்.
எம்.பி.என் மூவிஸ் சார்பில் எம்...
பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது...
அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி...