கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட பணச்செல்லாமை அறிவிப்பு பின்னணியில் நடைபெற்ற பல்வேறு மோசடிகளை வெளிச்சம் போட்டு காட்ட வருகிறது ‘மோசடி’ என்ற திரைப்படம். ஜே.சி.எஸ் மூவிஸ் என்ற நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் விஜூ நாயகனாக நடிக்க, நாயகியாக பல்லவி டோரா நடித்திருக்கிறார். இவர்களுடன் அஜெய்குமார், என்.சி.பி.விஜயன், வெங்கடாச்சலம், நீலு சுகுமாரன், ஓ.எஸ்.சரவணன், மோகன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
ஆர்.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஷாஜகான் இசையமைக்க, மணி அமுதவன், கே.ஜெகதீசன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். எஸ்.எம்.வி.சுப்பு, கோபி ரா.நாத் எடிட்டிங் செய்ய, விமல் மற்றும் பாலா நடனம் அமைத்திருக்கிறார்கள்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் கே.ஜெகதீசன் படம் குறித்து கூறுகையில், “இது முழுக்க முழுக்க உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படம்.
கடந்த 2016 ம் ஆண்டு நவம்பர் 8 ம் தேதி இரவு 8 மணியளவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானது. அதை தொடர்ந்து பெரும் புள்ளிகள் அவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை எப்படி இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக மாற்றினார்கள், அதனால் மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டார்கள், இந்த அறிவிப்பை பயன்படுத்தி எப்படி குறுக்கு வழியில் மோசடி செய்தார்கள், இந்த அறிவிப்பு சரியா? தவறா? என்பதை கிரைம் மற்றும் திரில்லருடன் கமர்ஷியல் கலந்து உருவாக்கி உள்ளேன்.” என்றார்.
தலைப்பு மற்றும் டீசர் மூலம் கவனம் ஈர்த்த பல படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது...
பிரபல இசையமைப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷின் சுயாதீன இசை பாடல்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், தற்போது மிகப்பெரிய பொருட்செலவில் இசை ஆல்பம் பாடலை பிரமாண்டமாக உருவாக்கியுள்ளார்...
அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...