அமைச்சர், துணை முதல்வர் இரண்டுமே இல்லை! - ரோஜாவுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய பதவி
Saturday June-08 2019

சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வெற்றிப் பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திர முதல்வராக பொறுப்பேற்ற நிலையில், அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

 

இதற்கிடையே, நடிகை ரோஜாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்க இருப்பதாக புதிய தகவல் ஒன்று நேற்று பரவியது. ஆனால், இன்று பதவி ஏற்ற 20 அமைச்சர்கள் மற்றும் 5 துணை முதல்வர்களில் ரோஜா இல்லை. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

நகரி தொகுதியில் வெற்றிப் பெற்ற ரோஜா, தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதோடு, பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கட்சிக்கு மக்களிடையே நன்மதிப்பை பெற்றுக்கொடுத்ததால், அவருக்கு நிச்சயம் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்த அவரது ஆதரவாளர்கள் இன்றைய அமைச்சர் பதவியின் போது அதிருப்தியடைந்தார்கள். இதனால், நகரி தொகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

இந்த நிலையில், அமைச்சர் மற்றும் துணை முதல்வர் என இரண்டு பதவிகளில் இருந்து ரோஜாவின் பெயரை நீக்கிய ஜெகன்மோகன் ரெட்டி, அவருக்கு சாதனைப் பதவி ஒன்றை வழங்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

 

அதாவது, ரோஜாவுக்கு ஆந்திர சட்டமன்றத்தின் சபாநாயகர் பதவி வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. சற்றுமுன் வெளியான இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால், நடிகை ஒருவர் சபாநாயகர் பதவி ஏற்பது இந்தியாவிலேயே இது தான் முதல் முறை என்பதோடு, சபாநாயகர் பதவி பெற்ற முதல் நடிகை என்ற சாதனையையும் ரோஜா நிகழ்த்துவார்.

Related News

5049

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery