பல நடிகர், இயக்குநர்கள் மீது பாலியல் புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்திய தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, தற்போது சென்னையில் வசித்து வருகிறார். அவ்வபோது சில பிரபலங்கள் மீது சில குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஸ்ரீரெட்டியின், சமீபத்திய பதிவு ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இயக்குநர்களும், நடிகர்களும் தன்னை பயன்படுத்திக் கொண்டதாக கூறியதோடு, பல முன்னணி பிரபலங்களின் பெயர்களை பகிரங்கமாக கூறிய ஸ்ரீ ரெட்டி, சமூக வலைதளத்தில் திருமணம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், என் பெற்றோரைத் தவிர வேறு யார் மீதும் என்னால் அன்பு செலுத்த முடியாது. எனக்கு ஒருவரை பிடித்திருந்தால், அவருடன் ஒரு வருடம் தான் டேட் செய்வேன். அதற்கு மேல் எனக்கு போரடித்துவிடும். அதனால் தான் எனக்கு திருமண பந்தமும் பிடிக்காது.
ஒவ்வொரு முறையும் எனக்கு புதிது புதிதாக காதல் வேண்டும். நான் ஒரு தனனா ப்ளேகேர்ள், டிராமா இல்லை. கமிட்மெண்ட் இல்லை, குழப்பம் இல்லை, உண்மையான பெண், என்று தெரிவித்துள்ளார்.
ஸ்ரீரெட்டி வெளியிடும் அனைத்து பதிவுகளும் சர்ச்சையை ஏற்படுத்துவது வழக்கமான ஒன்று தான் என்றாலும், தற்போது அவரது இந்த பதிவு பெண்களின் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.
பிரபல இசையமைப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷின் சுயாதீன இசை பாடல்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், தற்போது மிகப்பெரிய பொருட்செலவில் இசை ஆல்பம் பாடலை பிரமாண்டமாக உருவாக்கியுள்ளார்...
அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...
ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...