நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசருக்கு கமல் ஆதரவு!
Monday June-10 2019

வரும் ஜூன் 23 ஆம் தேதி நடைபெற இருக்கும் தென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தலில் பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் நாசருக்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்தார்.

 

நேற்று தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து நடிகர் நாசர் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதேபோல், பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் கார்த்தியும், செயலாளர் பதவிக்கு போட்டியிடும் விஷாலும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

 

வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாசர், “இது ஜனநாயக முறைப்படி நடிகர் சங்கத்துக்கு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தல். கடந்த முறை நாங்கள் தேர்தலை வேறொரு களத்தில் வேறொரு சூழ்நிலையில் சந்தித்தோம். இந்த முறை வேறொரு களமாக இருக்கிறது. அதை சந்திக்க வேண்டியது கடமை. நாங்கள் கடந்த 3 ஆண்டு காலம் செய்த பணிகள் சாட்சியாக நிற்கிறது. அதை நம்பி நாங்கள் போட்டியிடுகிறோம். எங்கள் சங்க உறுப்பினார்களின் மிகப் பெரிய ஆதரவு பாண்டவர் அணிக்கு இருக்கும் என்று நம்புகிறேன்.” என்றார்.

 

Nazar

 

நடிகர் சங்க தேர்தலில் அரசியல் தலையீடு இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதில் அளித்த நாசர், “அரசியல் தலையீடு என்பது அறவே கிடையாது. இன்றைய சூழலில் அரசுக்கு இதைவிட பெரிய பொறுப்புக்கள் இருக்கிறது. அதை கவனிக்க வேண்டியவர்கள் அதையெல்லாம் விட்டு விட்டு இந்த சிறு அமைப்பில் குறுக்கிடுவார்கள் என்பது அவர்கள் மீது வைக்கும் தப்பான விஷயம். அரசு அல்லது கட்சிகளின் தலையீடு சுத்தமாக கிடையாது. தனிப்பட்ட முறையிலும் சரி பொதுவாகவும் சரி நான் எப்போதும் நம்புவதும் சரி இந்த அமைப்பு எந்த ஒரு பாகுப்பாடுமின்றி செயல்படும். மத பாகுபாடோ அல்லது அரசியல் பாகுபாடோ, எந்த ஒரு பாகுபாடும் இல்லை.  நடிப்பு, நடிகர்களுடைய உரிமை, அவர்களுடைய வாழ்வு முறை இதற்க்கு தான் முன்னுரிமை. அரசியல் குறுக்கீடு இருந்திருந்தால் தலைவர் என்ற முறையில் முதல் குறுக்கீடு எனக்கு தான் வந்திருக்க வேண்டும். என்னிடம் யாரும் அப்படி பேசவில்லை." என்றார். 

Related News

5060

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery