’நேர்கொண்ட பார்வை’ படத்தை முடித்த அஜித் அடுத்தப் படத்திற்கு தயாராகி விட்டார். வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாக உள்ள ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதை தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்க இருக்கும் படத்தையும் இயக்குநர் வினோத் தான் இயக்குகிறார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம், பைக் ரேஸ் சம்மந்தமான கதை என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ’நேர்கொண்ட பார்வை’ படத்திற்காக வைத்திருந்த லுக்கை மாற்றி புதிய லுக்கிற்கு அஜித் மாறியுள்ளார். மீசை மற்றும் தாடி இல்லாமல், முடியும் ரொம்ப ஷாட்டாக வெட்டிக் கொண்டு அஜித் கிளாஸாக இருக்கும் அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்,
அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...
ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...