வரும் ஜுன் 23 ஆம் தேதி பிக் பாஸ் சீசன் 3 தொடங்க உள்ளது. ஆனால், நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்க போவது யார் யார்? என்ற தகவல்களை விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும் ஒரு சிலர் பெயர்கள் மட்டும் லீக்காகியுள்ளது.
தமிழில் மூன்றாவது சீசன் தொடங்குவது போல தெலுங்கிலும் பிக் பாஸ் சீசன் 3 தொடங்க உள்ளது. ஆனால், இதை யார் தொகுத்து வழங்குவார், என்பதிலும் குழப்பம் நிலவி வருகிறது.
இந்த நிலையில், தெலுங்கு பிக் பாஸ் சீசன் 3-யில் தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோவான பவன் கல்யாணின் முதல் மனைவியான ரேணு பங்கேற்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் பவன் கல்யாணை விவாகரத்து செய்த ரேணு, தொழிலதிபர் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் பிக் பாஸ் நிகழ்வில் பங்கேற்க இருக்கும் தகவல் பரவியது, பவன் கல்யாண் ரசிகர்கள் எப்போதும் போல, சமூக வலைதளங்களில் ரேணுவுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட தொடங்கி விட்டார்கள்.
இது குறித்து விளக்கம் அளித்த ரேணு, தான் எந்த ஒரு டிவி நிகழ்ச்சியிலும் கலந்துக்கொள்ளவில்லை. இது வெறும் வதந்தி மட்டுமே, என்று கூறியுள்ளார்.
அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...
ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...