அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Wednesday June-12 2019

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகளில் நடைபெற்று வருகிறது. இந்தி திரைப்படமான ‘பிங்க்’ படத்தின் ரீமேக்கான இப்படத்தில் அஜித் வழக்கறிஞர் வேடத்தில் நடிக்கிறார்.

 

வழக்கறிஞர் வேடம் மட்டும் இன்றி, முதிர்ச்சியான தோற்றத்தில் நடிக்கும் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். 

 

நடிகை ஸ்ரீதேவின் கணவரும், பிரபல பாலிவுட் தயாரிப்பாளருமான போனி கபூர் தயாரிக்கும் இப்படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்தாலும், படம் பற்றி எந்தவிதமான அதிகாரப்பூர்வம் அப்டேட் இல்லாமல் இருந்ததால், அஜித் ரசிகர்கள் சற்று அப்செட்டாகவே இருந்தனர்.

 

இந்த நிலையில், படத்தின் இரண்டாம் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கும் நேர்கொண்ட பார்வை குழுவினர், படத்தின் டிரைலர் இன்று (ஜுன் 12) மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

 

இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

 

Nerkonda Parvai New Poster

Related News

5068

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery