தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருக்கும் காஜல் அகர்வால், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள ‘பாரிஸ் பாரிஸ்’ என்ற படத்தில் நடித்து வருவதோடு, கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ உள்ளிட்ட சில படங்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது 33 வயதாகும் காஜல் அகர்வால், தனக்கு ஏற்பட்ட காதல் தோல்வி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
இது குறித்து பேட்டி ஒன்றில் பேசியவர், சினிமாவுக்கு வரும் முன்பே ஒருவரை காதலித்து அது தோல்வியில் முடிந்தது, என்று கூறியவர், சினிமாவுக்கு வந்து முன்னணி ஹீரோயினாக உயர்ந்ததும் ஒருவரை காதலித்தாராம். சினிமா துறையை சாராத அந்த நபருடனான காதலும் தோல்வியில் முடிந்ததாக வருத்ததுடன் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது காதல் தோல்விக்கு காரணம், தன்னால் காதலுருக்காக அதிக நேரம் ஒதுக்க முடியாமல் போனது தான், என்றும் கூறியுள்ளார்.
ஒரு உறவுமுறைக்கு முக்கியம் நேரில் சந்தித்து, நேரம் செலவிடுவது தான். ஆனால், என்னால் அதிக நேரம் ஒதுக்க முடியவில்லை. அதனால் தான் என் காதல் தோல்வியில், முடிந்தது என்று வருத்ததுடன் கூறிய காஜல் அகர்வால், தற்போது திருமணம் பற்றி யோசிக்கவில்லை, என்றும் கூறியுள்ளார்.
அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...
ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...