Latest News :

பழம்பெரும் நடிகை பி.வி.ராதா மரணம் - நடிகர் சங்கம் இரங்கல்
Sunday September-10 2017

பழம் பெரும் தென்னிந்திய திரைப்பட நடிகை பெங்களூர் விஜய ராதா என்ற பி.வி.ராதா இன்று பெங்களூரில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 69.

 

நடிகை பி.வி.ராதா மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இரங்கல் செய்தியில், ”எங்கள் நடிகர் சங்கம் உறுப்பினரான பி.வி.ராதா ( membership no : 132 ) இன்று பெங்களூருவில் மரணமடைந்தார் என்பதை அறிந்து மிகவும் வருந்துகிறோம். 1964-ல் நவகோடி நாராயணா என்ற கன்னட திரைப்படத்தில் அறிமுகமாகி குமாரி ராதா என்ற பெயரில் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்பட 300 க்கும் அதிகமான படங்களிலும் நடித்து பிரபலமானவர். இறுதி நாள்  நடிகர் சங்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்து சங்கம் செயல்படுகளை ஊக்குவித்து வந்தார். அவரது இழப்பு தென்னிந்திய திரைப்பட துறைக்கு மாபெரும் இழப்பாகும். 

 

அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த அனுதாபம் தெரிவிப்பதோடு அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர்  துக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கமும் பங்கு கொண்டு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

507

'TN 2026' படம் யாரையும் புண்படுத்தாது! - தம்பி ராமையா விளக்கம்
Saturday April-04 2026

‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...

எங்கள் படம் பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும்! - ’பிரேக் ஃபாஸ்ட்’ (Break Fast) படக்குழு நம்பிக்கை
Saturday April-04 2026

’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...

’மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் இயக்குநரை பாராட்டிய செல்வராகவன்!
Friday April-03 2026

வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...

Recent Gallery