பாலிவுட் சினிமாவின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவரான வித்யா பாலன், அவ்வபோது தென்னிந்திய மொழித் திரைப்படங்கள் சிலவற்றிலும் நடித்து வருகிறார். கதைக்கு தேவைப்பட்டால் கவர்ச்சியில் தாறுமாறு காட்டவும் தயாராக இருக்கும் வித்யா பாலன், ”40 வயதுக்கு மேல் தான் பெண்களுக்கு செக்ஸில் அதிக ஆர்வம் வரும்” என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இப்படி சர்ச்சையாக பேசுவதோடு, தன்னை விமர்சிப்பவர்களுக்கும் தகுந்த பதிலடி கொடுத்து வரும் வித்யா பாலனுடன் பிரபல தமிழ் சினிமா இயக்குநர் ஒருவர் மீட்டிங்கில் ஈடுபட்டு, பிறகு தெறித்து ஓடி வந்த சம்பவம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க பலர் ரெடியாகி வருகிறார்கள். பல்வேறு தலைப்புகளில் பல இயக்குநர்கள் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்க, அதில் இயக்குநர் விஜயும் ஒருவர். ‘தலைவி’ என்ற தலைப்பில் இவர் எடுக்க இருக்கும் படத்தில் ஜெயலலிதாவாக இந்தி நடிகை கங்கனா ரனவாத் நடிக்கிறார். அவருக்கு சம்பளமாக ரூ.24 கோடி வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், விஜய் தனது தலைவி படத்தில் முதலில் வித்யா பாலனை தான் நடிக்க வைக்க இருந்தாராம். அதற்காக அவர் வித்யா பாலனை சந்தித்து கதையும் சொன்னாராம். ஆனால், ஜெயலலிதா மற்றும் கதை குறித்து வித்யா பாலன், பல கேள்விகள் கேட்டாராம். ஆனால், விஜயால் அவரது கேள்விக்கு சரியான பதில் கூற முடியவில்லையாம். இதனால், அந்த மீட்டிங்கில் இருந்து தலைதெறிக்க ஓடி வந்த இயக்குநர் விஜய், தன் மனதில் இருந்த வித்யா பாலன் பெயரை அழித்துவிட்டு, வேறு ஒரு நடிகையை தேர்வு செய்யும் முடிவுக்கு வந்தாராம்.
அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...
ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...