ஆந்திர அரசியலில் தீவிரம் காட்டி வரும் நடிகை ரோஜா, ஜெகன்மோகன் ரெட்டியின் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பெண் தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் நகரி தொகுதியில் வெற்றிப் பெற்ற ரோஜா, அக்கட்சியின் வெற்றிக்கும் பெரிதும் உழைத்தார்.
இதன் காரணமாக, ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டது. பிறகு துணை முதல்வர் பதவி வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால், ஆந்திர அரசில் பதவி ஏற்ற 5 துணை முதல்வர்கள் பட்டியலில் ரோஜா பெயர் இல்லை. அதேபோல், அமைச்சர்களின் பட்டியலிலும் ரோஜா பெயர் இல்லை. இதனால் ரோஜாவுடன் அவரது ஆதரவாளர்களும் அதிருப்தியடைந்த நிலையில், அவருக்கு ஆந்திர சட்டமன்ற சபாநாயகர் பதவி வழங்க இருப்பதாக தகவல் வெளியானது. பிறகு அந்த பதவியும் ரோஜாவுக்கு வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், இன்று முதல் முறையாக ஆந்திர சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது. அதில், ஆந்திர மாநில அரசின் தொழிற்சாலைகள் உள் கட்டமைப்பு கழகத்தின் தலைவராக ரோஜா எம்.எல்.ஏ நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பதவியை எதிர்ப்பார்த்த ரோஜாவுக்கு அப்பதவி கிடைக்கவில்லை என்றாலும், தற்போது வழங்கப்பட்டிருக்கும் பதவியும் உயரிய பதவி என்பதால், அவரும் அவரது ஆதரவாளர்களும் சமாதானம் அடைந்துள்ளார்கள்.
அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...
ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...