கடந்த முறை நடைபெற்ற தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் தேர்தலின் போது சரத்குமார், ராதாரவி தலைமையிலான அணியை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி ஆகியோரது தலைமையிலான அணி, எதிர்த்தபோது தேர்தலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதோடு, ஏதோ தமிழக சட்டமன்ற தேர்தல் போல, அத்தனை தொலைக்காட்சிகளும் நடிகர் சங்க தேர்தலை நேரடி ஒளிபரப்பு செய்து, தமிழகத்தின் முழு கவனத்தையும் நடிகர் சங்கம் பக்கம் திருப்பியது.
கடந்த முறை இருந்தது போலவே தற்போது நடைபெற இருக்கும் நடிகர் சங்க தேர்தலிலும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. இந்த முறை ராதாரவி, சரத்குமார் ஆகியோர் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும், கடந்த முறை விஷால் அணிக்கு பல விதத்தில் உறுதுணையாக இருந்த, வேல்ஸ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் தலைவர் ஐசரி கணேஷ், இந்த முறை விஷாலுக்கு எதிராக புதிய அணியை உருவாக்கியிருப்பதோடு, விஷாலுக்கு எதிராக அவரே நேரடியாக களத்தில் இறங்கியிருப்பதால், கடந்த முறையை போலவே இந்த முறையும் நடிகர்கள் சங்க தேர்தல் குறித்த தகவல்களை அறிய மக்கள் தீவிரம் காட்ட தொடங்கி விட்டார்கள்.
இதற்கிடையே, விஷாலும், ஐசரி கணேஷும் ஒரே அணியில் இருக்க, இருவருக்கும் இடையே அப்படி என்ன பிரச்சினை வந்தது, ஏன் ஒருவரை ஒருவர் எதிர்த்துக் கொள்கிறார்கள்? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்திருக்கிறது.
எப்போதும் போல, விஷால் மற்றும் அவரது தலைமையின் கீழ் பல்வேறு குற்றச்சாட்டுகளை ஐசரி கணேஷ் அணியின் வைத்தாலும், விஷால் தரப்போ, நடிகர்கள் சங்க சொத்துக்களை காப்பாற்றவே மீண்டும் தேர்தலில் நிற்கிறோம், என்று கூறுகிறார்கள்.
இந்த நிலையில், விஷாலுக்கும் ஐசரி கணேஷுக்கும் இடையே பிரச்சினை வருவதற்கான உண்மையான காரணம் தெரிய வந்துள்ளது.
அதாவது, நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக நாசர், விஷால், கார்த்தி ஆகியோரது தலைமையிலான பொருப்பாளர்கள் பல்வேறு வகையில் நிதி திரட்டி வந்த நிலையில், விஷால் மற்றும் கார்த்தியை வைத்து ஐசரி கணேஷ் படம் தயாரிக்க முன்வந்தார். பிரபு தேவா இயக்குவதாக இருந்த இந்த படத்தில் வரும் லாபத்தை நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்கு பயன்படுத்தவும் முடிவு செய்தார்கள். ‘வெள்ளை ராஜா கருப்பு ராஜா’ என்று தலைப்பு வைக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இப்படம், சில பல பிரச்சினைகளால் டிராப்பானது.
இதையடுத்து, கட்டிடம் கட்டுவதற்கான நிதிக்காக ஐசரி கணேஷ், விஷாலுக்கு வேறு சில யோசனைகளை கூறினாராம். அதில் ஒன்று, அவர் நடிகர் சங்கம் கட்டிடம் கட்ட தேவைப்படும் ரூ.20 கோடியை தானே, ஒரே பேய்மெண்டாக கொடுத்துவிடுவதாகவும், அதற்குப் பதிலாக விஷால், கார்த்தி மற்றும் வேறு ஒரு நடிகர் என்று மொத்தம் மூன்று நடிகர்கள், ஆளுக்கு ஒரு படம் என்று மூன்று படங்கள் தனது தயாரிப்பில் நடித்துக் கொடுப்பதாக எழுதிக் கொடுக்க வேண்டும், என்று கேட்டாராம்.
மேலும், ”கட்டிடம் கட்ட தேவைப்படும் ரூ.20 கோடியை முன் கூட்டியே கொடுத்துவிடுகிறேன், அதை வைத்து கட்டிடத்தை விரைவாக கட்டி முடித்துவிடுங்கள், எனக்கு எப்போது வேண்டுமானாலும் படம் நடித்துக் கொடுங்கள், ஆனால், நடித்துக் கொடுப்பதாக தற்போது எழுதி மட்டும் கொடுத்து விடுங்கள்” என்றும் ஐசரி கணேஷ், கேட்டாராம்.
ஆனால், விஷாலோ ஐசரி கணேஷின் இந்த யோசனையோடு அவர் கூறிய பல யோசனைகளை தொடர்ந்து நிராகரித்து வந்ததாலேயே விஷால் மீது கோபமடைந்த ஐசரி கணேஷ், அவருக்கு எதிராக தற்போது களம் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...
ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...