விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள ‘மெர்சல்’ படம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என மூன்று ஹீரோயின்கள் நடிக்க, எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார். அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இப்படம் தீபாவளியன்று வெளியாகிறது.
இதற்கிடையே, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தின் மூலம் மீண்டும் விஜய் படத்தில் இணைந்துள்ள வடிவேலு, விஜயின் அப்பா வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. காமெடி வேடமாக இல்லாமல் குணச்சித்திர வேடமாக அவரது வேடம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல், கோவை சரளா விஜய்க்கு அம்மா வேடத்தில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
‘போக்கிரி’, ‘மதுரை’, ‘வில்லு’, ‘வசீகரா’, ‘காவலன்’ என விஜயுடன் இணைந்து வடிவேலு நடித்த அனைத்து படங்களின் காமெடிக் காட்சிகளும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...