தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய், தனது படங்கள் மூலமாகவும், வசூல் மூலமாகவும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். தொடர்ந்து தனது படங்களில் அரசியல் பேசி வருவதால், விஜயின் படங்கள் இந்திய அளவில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றன.
அந்த வகையில், விஜயின் அடுத்தப் படமான ‘தளபதி 63’ படத்தின் வியாபரம் மிகப்பெரிய அளவில் தொடங்கியிருப்பதோடு, ஆடியோ உரிமை வியாபாரம் உச்சத்தை தொட்டிருக்கிறது. மேலும், படத்தின் பஸ்ட் லுக் மற்றும் டீசருக்காக விஜய் ரசிகர்கள் மட்டும் இன்றி, சினிமா துறையினரும், அரசியல் துறையினரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், விஜயின் சாதனை ஒன்றை அஜித், ரஜினி, சூர்யா என எந்த முன்னணி நடிகர்களாலும் முறியடிக்க முடியாமல் உள்ளது. இதனால், விஜயின் அசைக்க முடியாத இந்த சாதனையால், அவர் தான் தொடர்ந்து நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார்.
ஆம், ‘சர்கார்’ படத்திற்குப் பிறகு ரஜினியின் ‘2.0’, அஜித்தின் ‘விஸ்வாசம்’, ‘சூர்யாவின் ‘என்.ஜி.கே’ மற்றும் ’காப்பான்’ ஆகிய படங்களின் டீசர்கள் வெளியாகி வைரலானாலும், விஜயின் ‘சர்கார்’ படடம் நிகழ்த்திய, அதிகம் பேர் பார்க்கப்பட்ட தென்னிந்திய திரைப்பட டீசர் என்ற சாதனையை எந்த படமும் இதுவரை முறியடிக்கவில்லை.
‘சர்கார்’ டீசர் இதுவரை 16 மில்லியன் பார்வையாளர்களை கடந்து தற்போது வரை முதலிடத்தில் உள்ளது.
அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...
ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...