ஆந்திர அரசியலில் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நடிகை ரோஜா, அம்மாநில அமைச்சராவது உறுதி என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவரை ஜெகன்மோகன் எந்த பதவியும் கொடுக்காமல் கழட்டிவிட்டிருப்பது ரோஜாவின் ஆதரவாளர்களை அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது.
நடந்து முடிந்த ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 151 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராக பொருப்பேற்ற நிலையில், நகரி தொகுதி எம்.எல்.ஏ-வான நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால், பதவி ஏற்ற 20 அமைச்சர்கள் பட்டியலில் ரோஜா பெயர் இல்லை. சரி துணை முதல்வர் பதவியாவது அவருக்கு கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. அதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. இப்படி அமைச்சர் மற்றும் துணை முதல்வர் இரண்டு பதவியும் கிடைக்காததால், சபாநாயகர் பதவியாவது தனக்கு வழங்க வேண்டும், என்று ரோஜா ஜெகன்மோகன் ரெட்டிக்கு கோரிக்கை விடுத்தாராம். ஆனால், அனைத்தையும் கேட்டுக்கொண்டு அமைதியாக இருந்த ஜெகன்மோகன் ரெட்டி, ரோஜாவுக்கு ஆந்திர மாநில தொற்சாலைகளை உள்கட்டமைப்பு குழு தலைவர் பதவியை மட்டுமே வழங்கியுள்ளார்.
ஜெகன்மோகன் ரெட்டியின் இந்த நடவடிக்கையால் ரோஜாவும், அவரது ஆதரவாளர்களும் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள்.
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் பெண் தலைவர்களின் முக்கியமானவராக இருந்த ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்காததற்கு என்ன காரணம்? என்று விசாரித்ததில், ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி சர்மிளா தான் காரணம் என்பது தெரிய வந்துள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியான உடன், ரோஜாவின் ஆதரவாளர்கள் ரோஜாவை கேம் சேஞ்சர் என்று வர்ணித்ததோடு, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் வெற்றிக்கு ரோஜா தான் முக்கிய காரணம், என்றும் கூறியிருக்கிறார்கள்.
இதனைக் கேட்டு கடுப்பான ஜெகன்மோகன் ரெட்டியின் தாயாரும், சகோதிரியும் கட்சியின் மூத்த தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியதோடு, ரோஜாவுக்கு எந்தவிதமான முக்கிய பதவியும் வழங்க கூடாது, என்ற முடிவுக்கும் வந்திருக்கிறார்கள்.
இதனாலயே, ஜெகன்மோகன் ரெட்டியின் அமைச்சரவையில் ரோஜாவின் பெயர் நீக்கப்பட்டதாம்.
அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...
ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...