அஜித் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பெண்களை மையப்படுத்திய இப்படம் இந்தி படமான ‘பிங்க்’ படத்தின் ரீமேக்காகும்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தை எச்.வினோத் இயக்கியிருக்கிறார்.
இந்த நிலையில், இப்படத்தில் அஜித் நடித்தது ஏன்? என்பது குறித்து இயக்குநர் வினோத் அளித்த பேட்டியில், “‘சதுரங்க வேட்டை’ ரிலீசுக்கு பிறகு எதிர்மறை வேடத்தில் அஜித்துக்காக ஒரு கதை தயார் பண்ணி இருந்தேன். அஜித்தோ ”நெகட்டிவ் கேரக்டர் பண்ணின வரை போதும். இனி நான் பண்ற படங்கள் மூலமா மக்களுக்கு நம்பிக்கையையும் கனவையும் தான் விதைக்கணும் என்று நினைக்கிறேன்னு” சொன்னவர், ”எனக்கு ஒரு படம் பிடிச்சிருக்கு. அதை நீங்க ரீமேக் பண்ணினா நல்லா இருக்கும்” என்று சொன்னார்.
என்ன படம் என்று கேட்டதற்கு, பிங்க் படம் என்று கூறினார். உடனே பதில் சொல்லாமல் தயங்கினேன்.
உடனே தொடர்ந்து பேசிய அஜித், “பெண்களுக்கு எதிராக நடக்கும் விஷயங்கள் அதிர்ச்சியை தருது. பெண்களைப் பற்றிய புரிதல்ல நம்ம சமூகம் ரொம்ப பலவீனமா இருக்கு. எனக்கே கூட என்மேல வருத்தம் இருக்கு. ஆரம்பகாலத்தில நானும் பெண்களைத் துரத்தித் துரத்திக் காதலிக்கிற படங்களில் நடிச்சிருக்கேன். நான் பண்ணின தவறை நானே சரி பண்ணணும்னு நினைக்கிறேன். இதுதான் என் அடுத்த படம். நீங்க இருந்தீங்கனா சந்தோஷம்.” என்று சொன்னார்.
நான் மறுபடியும் அவரை சந்திச்சப்போ, ஒரு பெண் இயக்குநர் இந்த படத்தை இயக்கினால் நன்றாக இருக்கும், என்று யோசனை சொன்னேன். ஆனால், அவரோ, “பெண் இயக்குநர் இயக்கினால், அவங்களுக்கு சாதகமாக பேசுறாங்கனு மக்கள் ஈசியா எடுத்துக்குவாங்க, இது பெண்களுக்கான படம் இல்லை, பசங்களுக்கான படம்” என்று சொன்னார். இப்படி தான் நானும், அஜித் சாரும் இந்த படத்தில் இணைந்தோம்.” என்றார்.
அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...
ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...