ஒரு நாளுக்கு ரூ.25 சம்பளம்! - அதிர்ச்சியில் பிக் பாஸ் குழு
Saturday June-15 2019

பிக் பாஸ் சீசன் 3 இம்மாதம் 23 ஆம் தேதி துவங்குகிறது. இரண்டு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனே மூன்றாவது சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார். தற்போது இரண்டாவது புரமோ வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

போட்டியாளர்கள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், போட்டியாளர்கள் பற்றி தினமும் தகவல்கல் கசிந்துக் கொண்டிருக்கின்றன.

 

தமிழைப் போல தெலுங்கிலும் பிக் பாஸ் சீசன் 3 விரைவில் துவங்க இருக்கிறது. ஆனால், இதை யார் தொகுத்து வழங்கப் போகிறார்கள்? என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

 

இந்த நிலையில், தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்பதற்காக பிரபல காமெடி நடிகர் சுனிலை பிக் பாஸ் குழுவினர் அணுகியுள்ளனர். அவர் தனக்கு ஒரு நாளுக்கு ரூ.25 லட்சம் சம்பளம் கொடுத்தால் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கிறேன், என்று கூறியுள்ளார்.

 

Telugu Actor Sunil

 

அவரது இந்த சம்பள தொகையை கேட்டு தெலுங்கு பிக் பாஸ் குழு மட்டும் அல்ல, தமிழ் பிக் பாஸ் குழுவினரும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Related News

5085

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery