தமிழ் சினிமாவின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் படங்கள் அனைத்தும் பிரம்மாண்டமான முறையில், மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படுகிறது. இதற்காக முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் முன்னணி ஹீரோயின்கள் ஒப்பந்தம் செய்யப்படுகிறார்கள்.
தற்போது பாண்டியராஜ் இயக்கும் படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் விரைவில் நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருக்கிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதில் ஹீரோயினாக தெலுங்குப் படமான ‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் பிரபலமான ராஷ்மிகாவை படக்குழு ஒப்பந்தம் செய்தது.
இந்த நிலையில், ராஷ்மிகா சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு முன்னணி ஹீரோ மகேஷ் பாபுக்கு ஜோடியாக ஒரு படத்தில் ராஷ்மீகா சமீபத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அப்படத்திற்கு தேதிகளை ஒதுக்கியவர், சிவகார்த்திகேயன் படத்திற்கு சரியான தேதிகளை ஒதுக்கி கொடுக்காமல் சொதப்பினாராம். இது குறித்து படக்குழு அவரிடம் கேட்டதற்கு, தனக்கு மகேஷ் பாபு படம் தான் முக்கியம் என்று கூறி, சிவகார்த்திகேயன் படத்தில் இருந்தே விலகிவிட்டதாக கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் முன்னணி நடிகைகள் சிலர் தனக்கு ஜோடியாக நடிக்க மறுப்பு தெரிவிப்பது குறித்து வருத்தப்பட்ட சிவகார்த்திகேயன், தற்போது முன்னணி ஹீரோவாக உயர்ந்தும், மற்ற ஹீரோவுக்காக தனது படத்தில் இருந்து நடிகை ஒருவர் விலகியதால் ரொம்பவே அப்செட் ஆகியுள்ளாராம்.
அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...
ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...