அஜித் இயக்குநரை வளைத்த சரவணா ஸ்டோர் அண்ணாச்சி! - விரைவில் ஹீரோ அவதாரம்
Sunday June-16 2019

தமிழகத்தின் முன்னணி சில்லறை ஆடை விற்பனை நிறுவனமான நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி, தனது கடை விளம்பரங்களில் நடித்து மக்களை அதிர்ச்சியடைய செய்தவர், பிறகு மேலும் மேலும் சில விளம்பரப் படங்களில் நடித்து மக்களை குஷிப்படுத்தினார்.

 

தமன்னா, ஹன்சிகா என இரண்டு ஹீரோயின்களையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு அவர் போட்ட ஆட்டத்தைப் பார்த்து மொத்த தமிழகமே சிரித்தாலும், அதையெல்லாம் பற்றி கவலைப்பாடாதவர் தொடர்ந்து விளம்பரப் படங்களில் விதவிதமாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

 

Saravana Store Annachi

 

இதற்கிடையே, அண்ணாச்சி விரைவிலேயே ஹீரோவாக களம் இறங்கப் போவதாக கடந்த பல மாதங்களாகவே தகவல் வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் அவர் நயன்தாராவுடன் ஜோடி போட விரும்புவதாகவும் கூறப்பட்டது.

 

இந்த நிலையில், அண்ணாச்சியின் ஹீரோ அவதாரம் விரைவில் அரங்கேற இருப்பதாக புது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அண்ணாச்சியை விளம்பரப் படங்களில் விதவிதமாக காட்டி வருபவர்கள் இயக்குநர்கள் ஜே.டி - ஜெர்ரி. இந்த இரட்டையர் இயக்குநர்கள் அஜித்தின் ‘உல்லாசம்’, ‘விசில்’ ஆகிய படங்களை இயக்கியுயிருப்பவர்கள் அண்ணாச்சி ஹீரோவாக நடிக்கும் படத்தையும் இவர்களே இயக்கப் போகிறார்களாம்.

 

ரூ.30 கோடி பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்க திட்டமிட்டிருக்கும் அண்ணாச்சிக்காக வட இந்தியாவை சேர்ந்த சூப்பர் பிகர் ஒருவரை ஹீரோயினாகவும் ஒப்பந்தம் செய்துவிட்டார்களாம்.

 

Director Jd and Jerry

 

படு கமர்ஷியலாக உருவாக உள்ள இப்படம் கருத்து சொல்லும் விதத்திலும் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

Related News

5087

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery