இயக்குநர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதி!
Monday June-17 2019

பிரபல திரைப்பட இயக்குநர் மணிரத்னம், திடீர் உடல்நலக் குறைவால் நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

’செக்கச் சிவந்த வானம்’ படத்தை தொடர்ந்து ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக எடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் மணிரத்னம், நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே, இப்படத்தை தயாரிப்பதாக இருந்த லைகா நிறுவனம், திடீரென்று பின் வாங்கிவிட, வேறு ஒரு தயாரிப்பாளரிடம் மணிரத்னம் பேச்சு வார்த்தை நடத்தி வந்தார்.

 

இந்த நிலையில், நேற்று இரவு மணிரத்னத்திற்கு திடீரென்று உடல் நிலை பாதிக்கப்பட்ட, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

மணிரத்னத்திற்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், அவருக்கு நெருக்கமானவர்கள், வயிறு கோளாறு காரணமாகவே மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், சிகிச்சை முடிந்து விரைவில் அவர் வீட்டுக்கு திரும்பி விடுவார், என்றும் தெரிவித்துள்ளனர்.

Related News

5090

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery